அரசு ஆஸ்பத்திரிகளில் நாய்க்கடி தடுப்பூசி தட்டுப்பாட்டால் பொதுமக்கள் தவிப்பு
- மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்
- குமரி மாவட்டத்தில் தொடரும் சம்பவம்
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் 95 ஊராட்சிகள், 55 பேரூராட்சி கள் 4 நகராட்சிகள், ஒரு மாந கராட்சி உள்ளது. இங்கு சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.
இவர்களுக்கு தற்போது அச்சுறுத்தலாக உள்ளது தெருநாய்கள். இவற்றின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. நாகர்கோவில் மாநகரை பொறுத்த மட்டில் வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம் மற்றும் தெரு வீதிகளிலும் நாய்கள் சுற்றி திரிகின்றன.
இவற்றை கட்டுப்படுத்த கருத்தடை ஆபரேசன்கள் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் நாய்களின் தொல்லை குறைந்த பாடில்லை. கிராமப்புறங்க ளிலும் நாய்களின் தொல்லை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்த நாய்கள் தெருக்க ளில் செல்வோரை துரத்தி துரத்தி கடிக்கும் சம்பவங்கள் தினமும் நடந்து வருகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
நாய் கடிக்கு அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்க ளில் ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டு வந்தது. ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேர மும் தடுப்பூசி செலுத்த ப்பட்டு வருகிறது. ஆனால் சமீபகாலமாக தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நாய் கடிக்கு செலுத்தப்படும் தடுப்பூசி நிறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வர வேண்டிய நிலையில் உள்ளனர். மாவட்ட எல்லை பகுதியிலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் வரை வந்து தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.
ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் தினமும் 100 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது இங்கும் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி 7 நாட்கள் கழித்த பிறகு 2-வது தடுப்பூசி, 21 நாட்கள் கழித்த பிறகு 3-வது தடுப்பூசி என 7 தடுப்பூசிகள் நாய்க்கடிக்கு செலுத்த வேண்டிய நிலை இருந்து வருகிறது.
ஆனால் இங்கு போதுமான தடுப்பூசி இல்லாத தால் பொதுமக்கள் தற்பொழுது பரிதவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நாய்க்கடி தடுப்பூசியை அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் செலுத்த நடவடிக்கை எடுப்பதுடன் ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் தங்கு தடை இன்றி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.