உள்ளூர் செய்திகள்

பேச்சிப்பாறை அணையில் இருந்து 1000 கனஅடி உபரிநீர் திறப்பு

Published On 2022-09-06 08:17 GMT   |   Update On 2022-09-06 08:17 GMT
  • நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் நடவடிக்கை
  • நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.80 அடியாக உள்ளது.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் அணை பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

இதையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளுக்கு கணிச மான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இரண்டு அணைகளும் முழு கொள்ளளவை எட்டி வருவதையடுத்து அணை யின் நீர்மட்டத்தை பொதுப் பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

பேச்சிப்பாறை அணை யில் இருந்து உபரி நீர் இன்று மதியம் 1000 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் களியல், திற்பரப்பு அருவி மற்றும் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

திற்பரப்பு அருவியில் வெள்ளம் அதிகளவு வரும் என்பதால் பேரூராட்சி நிர்வாகம் அதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

48அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 45.64 அடியாக இருந்தது. அணைக்கு 1560 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 575 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 1000 கனஅடி உபரிநீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.27 அடியாக உள்ளது .அணைக்கு 1127 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து 160 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 12.63 அடியாக உள்ளது. அணைக்கு 215 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 150 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 12.73 அடியாகவும், பொய்கை நீர்மட்டம் 16.90 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 37.89 அடியாகவும் உள்ளது.

நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.80 அடியாக உள்ளது.

Tags:    

Similar News