மெதுகும்மல் ஊராட்சியில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் 2 சாலைகள் சீரமைப்பு
- ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி:
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மெது கும்மல் ஊராட்சியில் உள்ள தையாலுமூடு - குழிவிளை செல்லும் சாலை, நெடும் பறம்பு - மைலாடும் பாறை செல்லும் சாலைகள் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் மிகப்பெரிய குண்டும் குழிகளாக காணப்பட்டது.
இதனால் இந்த சாலை களில் பொதுமக்கள் வாகனங்களிலும், நடந்து செல்லவும் முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். எனவே இந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று கேட்டு ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தமிழக முதலமைச்சர் மற்றும் நகராட்சி துறை அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும் தொடர்ந்து நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தையாலுமூடு - குழிவிளை சாலைக்கு ரூ.29 லட்சமும், நெடும்பறம்பு - மைலாடும் பாறை செல்லும் சாலைக்கு ரூ.41 லட்சம் என இரண்டு சாலைகளுக்கும் மொத்தம் ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.
இந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சூரிய கோடு காங்கிரஸ் கமிட்டி கிளை தலைவர் சுரேஷ், மெதுகும்மல் ஊராட்சி துணை தலைவர் நாராயணன், மெதுகும்மல் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி செல்வராஜ், முஞ்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிறிஸ்டோபர், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் லூயிஸ், முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ராஜேஷ்வரி, குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் விஜயகுமார், முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், மற்றும் பொறியாளர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.