ராஜாக்கமங்கலம் அருகே தொழில் அதிபர் வீட்டில் கொள்ளை - நிதி நிறுவன ஊழியர்களிடம் போலீசார் விசாரணை
- கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படை
- கையுறை அணிந்திருந்ததுடன் மிளகாய் பொடியையும் தூவி சென்றுள்ளனர்.
ராஜாக்கமங்கலம், மே.16-
ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் பகுதியை சேர்ந்தவர் பூதலிங்கம். இவரது மகன் முருகன் (வயது 43) தொழிலதிபர்.
இவர் தனது வீட்டின் வளாகத்தில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். ரியல் எஸ்டேட் மற்றும் வெளி நாட்டிற்கு பொருட்கள் ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார். இவரது மனைவி மேரிபெல். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மூத்த மகன் சென்னை யில் படித்து வருகிறார்.
இன்னொரு மகனும், மகளும் வெளிநாட்டில் படித்து வருகிறார்கள். முருகன் அவரது மனைவி யும் சென்னையில் உள்ள மகனை பார்ப்பதற்காக சென்றிருந்தனர். நேற்று காலை பூதலிங்கம் மகன் முருகன் வீட்டிற்கு வந்து மீன் தொட்டியில் உள்ள மீன்களுக்கு உணவளிக்க வந்திருந்தார். அப்போது நிதி நிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் கதவுகளும் உடைக்கப் பட்டு திறந்து கிடந்தது. வீட்டில் இருந்த பீரோக்களும் உடைக்கப் பட்டு இருந்தது.
இதுகுறித்து பூதலிங்கம் மகன் முருகனுக்கு தகவல் தெரிவித்தார். முருகன் ராஜாக்கமங்கலம் போலீ சுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி னார்கள். விசாரணையில் 53 பவுன் நகை மற்றும் ரூ. 6 லட்சத்து 20 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப் பட்டு வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை போலீசார் பதிவு செய்தனர். அப்போது கைரேகைகள் எதுவும் சிக்கவில்லை.
கொள்ளையர்கள் கையுறை அணிந்து கை வரிசை காட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. மோப்ப நாயும் வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கொள்ளை யர்கள் தடயங் கள் சிக்காமல் இருக்கும் வகையில் மிளகாய் பொடி யையும் வாசலில் தூவி சென்றுள்ளனர். மின் விளக்குகளை துண்டித்து கை வரிசையில் ஈடுபட்டி ருப்பதும் தெரியவந்துள்ளது. கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது.
தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சி களை கைப்பற்றி விசா ரணை மேற்கொண்டு வரு கிறார்கள். மேலும் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர்க ளது செல்போன் அழைப்புகளையும் போலீசார் சோதனை செய்தனர். முருகன் ஊரில் இல்லாததை நோட்டமிட்டே கொள்ளை யர்கள் இந்த கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்திக்கி றார்கள். மேலும் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கையுறை அணிந்திருந்ததுடன் மிளகாய் பொடியையும் தூவி சென்றுள்ளனர்.
மேலும் மின்விளக்கை துண்டித்து கைவரிசையில் ஈடுபட்டுள்ளதால் ஏற்கனவே கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் இதில் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே பழைய கொள்ளையர்களின் விவரங்களை சேகரித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.