உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் சிறப்பு குழு அதிரடி சோதனை

Published On 2023-05-28 09:34 GMT   |   Update On 2023-05-28 09:34 GMT
  • அதிக பாரம் கனிமவளம் ஏற்றி சென்ற லாரிகளுக்கு அபராதம்
  • கலெக்டர் உத்தரவின் பேரில் நடவடிக்கை

நாகர்கோவில் :

குமரி மாவட்டத்தில் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த சிறப்பு குழு அமைத்து, கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அந்த குழுவினர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேது ராமலிங்கம் மற்றும் ஒருங்கிணைந்த சிறப்பு அலுவலர்கள் குழு நேற்று மாலை முதல் இரவு வரை அதிக அளவு பாரம் ஏற்றி செல்லும் வாக னங்களை கண்காணித்தனர்.

நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சசி, அப்துல் மன்னார் உள்ளிட்ட சிறப்பு அதிகாரிகள் குழு, ஜெகதா மற்றும் காவல்துறை அலுவலர்கள் அப்டா மார்க்கெட் அருகே 37 வாகனங்களை இடைமறித்து சோதனையிட்டதில், 7 வாகனங்களில் கொள்ளள வுக்கு அதிகமாக கனிமங்கள் கொண்டு செல்வது கண்டறியப்பட்டது.

அதில் 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள 4 லாரி உரிமையாளர்களுக்கு தலா ரூ.45 ஆயிரம் வீதம் ரூ.1.80 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் செண்பகராமன்புதூர், ஆரல்வாய்மொழி, வீரமார்த்தாண்டபுரம் மற்றும் குமாரபுரம் கிராமங்களிலும் வாகன சோதனை நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து வட்டாட்சியர் (நிலம் கையகப்படுத்துதல்) சேகர் தலைமையிலான சிறப்பு குழுவினர் மணலி, படந்தாலுமூடு அருகே கனிமங்கள் ஏற்றிச்சென்ற 10 வாகனங்கள் மற்றும் உதவி புவியியல் ஆய்வாளர் தலைமையில் படந்தாலுமூடு, செங்கவிளை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டதில் 9 வாகனங்கள் அதிக அளவு கனிமம் ஏற்றி சென்றது கண்டறியப்பட்டது.

மொத்தமாக கனிமங்கள் ஏற்றிச் சென்ற, 56 வாகனங்களை, சிறப்பு அதிகாரிகள் குழு மறித்து சோதனையிட்டதில், 7 வாகனங்களில், கொள்ளளவுக்கு அதிகமாக கனிமங்கள் கடத்தப்பட்டது கண்ட றியப்பட்டு, 7 வாகனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று தொடர்ந்து அதிக பாரம் ஏற்றும் கனரக வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News