உள்ளூர் செய்திகள்

விளையாட்டு வீரர்கள் போட்டியில் பரிசு பெற்று குமரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் - கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள்

Published On 2023-03-01 06:59 GMT   |   Update On 2023-03-01 06:59 GMT
  • பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் திறமைகளை கண்டறிந்து சிறந்த வீரர், வீராங்கனை களை உருவாக்க வேண்டும்
  • தனிநபர் போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெறுபவர்களும், குழுப் போட்டிகளில் தேர்வுக்குழு மூலம் தேர்வு

நாகர்கோவில் :

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசு மாணவ, மாணவியர்கள் கல்வியில் பல்வேறு திட்டங் களை அறிவித்து செயல்படுத்தி வருவதோடு, விளையாட்டுத்துறையிலும் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் திறமைகளை கண்டறிந்து சிறந்த வீரர், வீராங்கனை களை உருவாக்க வேண்டுமென்று பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் கல்வியில் சிறந்த மாவட்டமாகும். அதேபோல் தடகளம், கபடி, இறகுப்பந்து, கையுந்துபந்து, செஸ் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு வருவதோடு, பல்வேறு போட்டிகளில் தங்கப்பதக்கமும், வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளார்கள்.

குறிப்பாக, முதலாவது கேலோ இந்தியா (2021-2022) தேசிய அளவிலான வாலிபால் போட்டியில் ஆஸ்லின் சானியா என்ற வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றுள்ளார். டெல்லியில் 2021-2022 டெல்லியில் நடைபெற்ற தடகள நேஷனல் விளையாட்டு போட்டியில் செல்வன் அசதுல்லா முஜாஹித் கலந்து கொண்டு வெண்கலம் பதக்கம் வென்றுள்ளார். அகமதாபாத் பகுதியில் தேசிய அளவிலான தடகள போட்டி (2022-2023) 3-வது நேஷனல் விளையாட்டில் செல்வி கிரேசினா மெர்லி வெண்கலம் பதக்கம் வென்றுள்ளார். மேலும், போலந்து நாட்டில் நடைபெற்ற காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டிகளிலும் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளார்கள்.

தற்போது, 2022-23ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான தனிநபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் 12 முதல் 19 வயது வரை பள்ளிப் பிரிவாகவும், 17 வயது முதல் 25 வரை கல்லூரிப் பிரிவாகவும், 15 முதல் 35 வயது வரை பொதுப் பிரிவாகவும் மற்றும் அரசு ஊழியர், மாற்றுத் திறனாளிகள் என 5 பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றது. குறிப்பாக, அரசு துறைகளான வருவாய்த்துறை, காவல் துறை, தீயணைப்புத்துறை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஆண்கள் மற்றும் பெண்க ளுக்கு தடகளம், கபடி, இறகுப்பந்து, கையுந்துபந்து, மற்றும் செஸ் போட்டிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.

மேலும், இப்போட்டி களில் முதல் இடங்களை பிடிப்பவர்களுக்கு தலா ரூ.3000/-மும், 2-ம் இடத்தை பிடிப்பவர்களுக்கு தலா ரூ.2000/-மும், 3-ம் இடத்தை பிடித்தவர்களுக்கு தலா ரூ.1000/- வீதம் என மொத்தம் ரூ.42.02 லட்சம் பரிசு தொகை வழங்குவதற்கு நமது மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தனிநபர் போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெறுபவர்களும், குழுப் போட்டிகளில் தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்படும் சிறந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இது போன்று பல்வேறு விளையாட்டுப் போட்டி களில் கலந்து கொண்டு நமது மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News