குலசேகரபுரத்தில் ஆடிபெருக்கையொட்டி சுமங்கலி பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்
- குலசேகர நங்கை அம்மன் கோவிலில் முளைப்பாரிக்கு தேவையான நவதானியங்கள் மற்றும் கும்பம் பூஜைக்கு வைக்கும் நிகழ்ச்சி நடந்தது
- ஆற்றில் பெண்கள் முளைப்பாரியை கரைத்தனர். இதில் திரளான சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி :
கொட்டாரம் அருகே உள்ள குலசேகர புரத்தில் ஸ்ரீ குலசேகர நங்கை அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஸ்ரீ குலசேகர நங்கை பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் நடத்தும் 5-ம் ஆண்டு ஆடிப்பெருக்கு விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு குலசேகர நங்கை அம்மன் கோவிலில் முளைப்பாரிக்கு தேவையான நவதானியங்கள் மற்றும் கும்பம் பூஜைக்கு வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.
பின்னர் பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. 2-வது நாளான நேற்று காலை ஆடிப்பெருக்கை முன்னிட்டு குலசேகர நங்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர்10 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கு தலும் நடந்தது. மாலை யில் குலசேகரநங்கை அம்ம னுக்கு சிறப்பு வழி பாடும் அதைத்தொடர்ந்து குலசேகர நங்கை அம்மனின் பெண் பக்தர்கள் கும்பம் மற்றும் முளைப்பாரி எடுத்து வீதிகளில் மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்தனர்.
கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக குலசேகரபுரம் லட்சுமிபுரம் சந்திப்பில் உள்ள மயான சுடலை மாடசுவாமி கோவில் அருகே உள்ள புத்தன் ஆற்று கரையை சென்றடைந்தது. அங்கு ஆற்றில் பெண்கள் முளைப்பாரியை கரைத்தனர். இதில் திரளான சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை குலசேகரபுரம் ஸ்ரீ குலசேகர நங்கை அம்மன் மகளிர் பக்தர்களான சிவகாமி, வேலம்மாள், இசக்கியம் மாள் உள்பட பலர் செய்து இருந்தனர்.