கொட்டில்பாட்டில் மீண்டும் கடல் சீற்றம்
- நிரந்தர அலை தடுப்பு சுவர் அமைக்க வேண்டுகோள்
- பாதுகாப்பு கருதி வீட்டை விட்டு வெளியேறிய மக்கள் உறவினர் வீடுகளில் தஞ்சம்
கன்னியாகுமரி :
குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படும்.
இந்த ஆண்டும் கடந்த சில நாட்களாக கடல் சீற்றம், உள் வாங்குதல் போன்ற மாற்றங்கள் ஏற்பட்டு வரு கின்றன. நேற்று முதல் குளச்சல் அருகே கொட்டில் பாட்டில் கடல் சீற்றமாக உள்ளது. ராட்சத அலைகள் எழுந்து அலை தடுப்பு சுவரை தாண்டி விழுகிறது.
கடந்த ஆண்டு பழைய ஆலயத்தின் அருகில் ஏற்பட்ட அலை தடுப்பு சுவர் கற்கள் சரிந்து விழுந்த பகுதியில் சுமார் 25 அடி ஆழத்திற்கு பள்ளம் விழுந்ததில் மேற்கு சாலையில் துண்டிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது ஏற்பட்ட கடல ரிப்பில் பழைய ஆலயம் அருகில் கிழக்கு பகுதியில் மேலும் ஒரு சாலை துண்டிக் பப்பட்டுள்ளது. ஊருக்குள் கடல் நீர் புகும் அபாயமும் ஏற்பட்டது.
இதனால் கிழக்கு பகுதியில் உள்ள சுமார் 10 வீட்டினர், வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்கள் வீட்டில் தஞ்சமடைந்து உள்ளனர்.
கொட்டில்பாடு கிழக்கு பகுதியில் உள்ள வீடுகளை பாதுகாக்க நிரந்தர அலை தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.