வடசேரி காய்கறி மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்றுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
- மேயர் மகேஷிடம் வியாபாரிகள் வலியுறுத்தல்
- வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநக ராட்சியில் வியாழக்கிழமை தோறும் பொதுமக்களிட மிருந்து மேயர் மகேஷ் கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார். அதன்படி இன்று அவர் மனுக்களை பெற்றார். மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினார்.
அப்போது வடசேரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள், மேயர் மகேசை சந்தித்து பேசினார்கள். காய்கறி மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்றும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். வடசேரியில் தொடர்ந்து மார்க்கெட் இயங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லா விட்டால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்.
இதற்கு பதிலளித்து மேயர் மகேஷ் கூறியதாவது:-
நாகர்கோவில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள கனகமூலம் சந்தை யில் 123 கடைகள், கடந்த 17 மாதங்களாக காலியாக இருந்து வருகிறது. பலமுறை ஏலத்துக்கு வைத்தும் அவை ஏலம் செல்லவில்லை. இந்த நிலையில் வடசேரி பகுதியில் புதிதாக ரூ.55 கோடி செலவில் பஸ் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து காய்கறி மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். புதிதாக ரூ. 55 கோடியில் பஸ் நிலையம் அமைக்கும் போது அந்த பகுதியில் 3 மாடி கட்டிடம் ஒன்றும் கட்டப்பட உள்ளது. அந்த கட்டிடத்தில் காய்கறி சந்தையை அமைக்கலாமா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டோம். ஆனால் அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்பது தெரியவந்தது. பஸ் நிலையத்தை யொட்டி காய்கறி மார்க்கெட் இருந்தால் வியாபாரிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை மனதில் கொண்டு அண்ணா பஸ் நிலையத்தில் காய்கறி மார்க்கெட்டை திறக்க நடவடிக்கை மேற் கொண்டுள்ளோம்.
ஏற்கனவே கனகமூலம் சந்தையில் உள்ள கடைகள் குறுகிய அளவில் உள்ளது. இனிவரும் காலங்களில் கடையின் அளவை அதிகரித்து கட்ட நட வடிக்கை எடுக்கப்படும். தற்பொழுது வியாபாரம் செய்து வரும் வியாபாரி களுக்கு முன்னுரிமை அளித்து கடை வழங்கப்ப டும். இவ்வாறு அவர் கூறினார்.
மாநகராட்சி ஆணையர் ஆனந்தமோகன், என்ஜினியர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.