உள்ளூர் செய்திகள்

தக்கலையில் பணம் பறித்த வழக்கில் கைதானவர் போலீஸ் நிலைய கழிவறையில் தற்கொலைக்கு முயன்ற பெண் கைதி சிறையில் அடைப்பு

Published On 2022-08-25 08:26 GMT   |   Update On 2022-08-25 08:26 GMT
  • அந்த வழியே வந்த ஒரு பெண், சாந்தகுமாரி கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றார்.
  • போலீசார் அதிர்ச்சி அடைந்து கவி தாவை மீட்டு தக்கலை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்

கன்னியாகுமரி :

தக்கலை அருகே உள்ள முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமாரி.

இவர் தக்கலை பஸ்நிலையம் அருகில் நடந்துசென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த ஒரு பெண், சாந்தகுமாரி கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றார்.

ஆனால் சாந்தகுமாரி சுதாரித்துக் கொண்டு நகையை காப்பாற்ற போராடினார். மேலும் அந்த பெண்னை பிடித்து தக்கலை போலீசிலும் ஒப்படைத்தார். போலீசார் அந்தப் பெண்ணை கைது செய்து விசாரித்தனர்.

இதில் அந்த பெண் கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்த செந்தில் மனைவி கவிதா (வயது35) என்பது தெரியவந்தது. அவர் பல இடங்களில் திருடியிரு ப்பதும், பெயர்களை மாற்றி மாற்றி கூறி வருவதும் விசா ரணையில் கண்டு பிடிக்க ப்பட்டது.

இந்த நிலையில் போலீஸ் நிலையத்தில் இருந்த கவிதா, கழிவறை செல்ல வேண்டும் என கூறி உள்ளார். தொடர்ந்து அங்குள்ள கழிவறைக்குச் சென்ற அவர், அங்கு வைத்திருந்த பினாயிலை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார்.

இதை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்து கவி தாவை மீட்டு தக்கலை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். சிகிச்சைக்குப் பிறகு அவரை மாலையில் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்பு தக்கலை பெண்கள் சிறை யில் அடைத்தனர்.

Tags:    

Similar News