உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் நாகராஜா கோவிலில் இன்று உண்டியல் எண்ணிக்கை

Published On 2023-09-19 07:12 GMT   |   Update On 2023-09-19 07:12 GMT
  • கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாகராஜரை தரிசித்து சென்றனர்.
  • உண்டியல்கள் அனைத்தும் 3 மாதங்களுக்கு ஒரு முறை திறந்து எண்ணப்படுவது வழக்கம்

நாகர்கோவில் :

நாகர்கோவில் நாகராஜா கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். மேலும் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் குமரி மாவட்டத்திலிருந்து மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாகராஜரை தரிசித்து சென்றனர்.

அவ்வாறு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் கோவிலை சுற்றிலும் 11 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் அனைத்தும் 3 மாதங்களுக்கு ஒரு முறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி இன்று கோவிலில் உள்ள 11 உண்டியல்களும் திறந்து எண்ணப்பட்டன.

குமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் ஆகியோர் தலைமையில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. நிகழ்ச்சியில் உதவி ஆணையர் தங்கம் முன்னிலை வகித்தார். கண்காணிப்பாளர் ஆனந்த், ஸ்ரீகாரியம் ராமச்சந்திரன் மற்றும் கோவில் பணியாளர்கள், சுய உதவி குழு பெண்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News