ஊராட்சி தலைவர்களுக்கான பயிற்சி பட்டறை
- ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்கள் பற்றி விரிவாக விளக்கினார்கள்.
- சலேட் கிறிஸ்டோபர் மற்றும் ஊராட்சி மன்ற துணை தலைவர்கள், செயலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
திருவட்டார் :
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கூட்ட அரங்கில் வைத்து ஜல் ஜீவன் மிஷன் 2023-2024-ம் ஆண்டுக்கான ஊராட்சி தலைவர், துணை தலைவர் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கான ஒரு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசி, யசோதா ஆகியோர் கலந்துகொண்டு ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்கள் பற்றி விரிவாக விளக்கினார்கள். பயிற்சியாளர்கள் செல்வம், ராணி ஆகியோர் ஜல் ஜீவன் மிஷன், நீரின் முக்கியத்துவம், நீர் ஆதாரங்கள் மாசடைதல், கிராம ஊராட்சிகளில் குடிநீர் விநியோகம், கூட்டுக்குடிநீர் திட்டம், குடிநீர் நீர்தேக்க தொட்டி பராமரித்தல் ஆகியவை பற்றி எடுத்துரைத்தார்கள். கூட்டத்தில் ஊராட்சிமன்ற தலைவர்கள் பிடி.செல்லப்பன், பால்சன், இசையாஸ், தேவதாஸ், அனுசன் அய்யப்பன், லில்லிபாய் சாந்தப்பன், விமலா சுரேஷ், கெப்சிபாய் றூஸ், ரெஜினிவிஜிலா பாய், சலேட் கிறிஸ்டோபர் மற்றும் ஊராட்சி மன்ற துணை தலைவர்கள், செயலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.