உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தது

Published On 2023-09-03 06:36 GMT   |   Update On 2023-09-03 06:36 GMT
  • தக்காளி ரூ.20-க்கு விற்பனை
  • பெண்கள் வழக்கம்போல் தக்காளி வாங்க தொடங்கியுள்ளனர்.

நாகர்கோவில் :

தமிழகம் முழுவதும் கடந்த மாத தொடக்கத்தில் தக்காளி விலை அதிகரித்து காணப்பட்டது. ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற் பனை செய்யப்பட்டது.

தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசு நட வடிக்கை மேற்கொண்டது. ரேஷன் கடைகள் மூலமாக வும் தக்காளி விநியோகம் செய்யப்பட்டது. இருப்பினும் தக்காளியின் உற்பத்தி குறைவாக இருந்ததால் விலை அதிகமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக தக்காளியின் விலை படிப் படியாக குறைய தொடங்கி உள்ளது.

குமரி மாவட்டத்திலும் ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற்பனை செய்யப் பட்டது. உள்ளூர் பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து அடியோடு நின்றதால் விலை உயர்ந்து காணப்பட்டது. பெங்களூரில் இருந்து மட்டுமே தக்காளி விற்ப னைக்காக கொண்டுவரப் பட்டது.

தக்காளியின் விலை புதிய உச்சத்தை தொட்டதையடுத்து பொதுமக்கள் தக்காளி பயன்பாட்டை குறைந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நெல்லை மாவட்ட பகுதி களில் இருந்தும் தக்காளி விற்பனைக்குவர தொடங்கி யது. அதிகளவு தக்காளி விற்பனைக்கு வந்ததையடுத்து விலை குறைய தொடங்கியது.

ஓசூர், பெங்களூர் பகுதி களில் இருந்தும் அதிகளவு தக்காளி தற்பொழுது விற்பனைக்கு வருகிறது. இதனால் விலை நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் ஒரு கிலோ தக்காளி ரூ.40 ஆக குறைந்தது. இந்த நிலையில் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு விற்கப்பட்டது. 25 கிலோ எடை கொண்ட தக்காளி பாக்ஸ் ரூ.400-க்கு விற்பனையானது.

இதேபோல் இஞ்சியின் விலையும் குறைய தொடங்கியுள்ளது. ஒரு கிலோ இஞ்சி ரூ.280 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று ரூ.150 ஆக குறைந்துள்ளது. இதேபோல் கேரட், பீன்ஸ், கத்தரிக்காய், மிளகாய் விலையும் குறைந் துள்ளது.

நாகர்கோவில் மார்க்கெட்டில் விற்பனையான காய்கறி களின் விலை விவரம் வருமாறு:-

தக்காளி ரூ.20, முட்டை கோஸ் ரூ.25, காலிப்ளவர் ரூ.25, கத்தரிக்காய் ரூ.30, வழுதலங்காய் ரூ.50, பீன்ஸ் ரூ.60, கேரட் ரூ.70, பீட்ரூட் ரூ.45, மிளகாய் ரூ.70, பல்லாரி ரூ.35, சிறிய வெங்காயம் ரூ.75, சேனை ரூ.70, இஞ்சி ரூ.150, வெள்ளரிக்காய் ரூ.20, முருங்கைக்காய் ரூ.25, புடலங்காய் ரூ.35, உருளைக்கிழங்கு ரூ.35, வெண்டைக்காய் ரூ.30.

காய்கறி விலை குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், தக்காளி வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உள்ளூர் பகுதிக ளிலிருந்தும் அதிகளவு தக்காளி வந்து கொண்டி ருப்பதால் விலை சரிந்துள்ளது. தக்காளி விலை அதிகமாக இருந்த போது பொதுமக்கள் தக்காளி வாங்குவதை தவிர்த்து வந்தனர். தற்பொழுது பெண்கள் வழக்கம்போல் தக்காளி வாங்க தொடங்கியுள்ளனர்.

கிலோ கணக்கில் பெண்கள் தக்காளியை வாங்கி செல்கிறார்கள். இதேபோல் மற்ற காய்கறி களும் அதிக அளவு தற்போது விற்பனைக்கு வருவதால் கடந்த மாதம் விற்பனை செய்யப்பட்ட விலையை விட தற்பொழுது விலை சற்று குறைந்துள்ளது.

தற்பொழுது திருமண சீசன் உள்ள நிலையிலும் வரத்து அதிகரித்து காணப்படுவதால் விலை குறைந்து காணப்படுகிறது என்றார்.

Tags:    

Similar News