உள்ளூர் செய்திகள்

மண்டைக்காடு பகுதியில் கடல் தண்ணீர் நிறம் மாறியது ஏன்?

Published On 2023-03-27 06:21 GMT   |   Update On 2023-03-27 06:21 GMT
  • கடற்கரையை ஒட்டிய அலை அடிக்கும் பகுதிகள் செம்மண் நிறமாகவும் காட்சி தருகிறது
  • தொழிற்சாலை கழிவுகள் கடலில் கலப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது

கன்னியாகுமரி :

குமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரை பகுதியில் மணவாளக்குறிச்சி, சின்ன விளை, பெரியவிளை மண்டைக்காடு, புதூர், கொட்டில் பாடு வரையிலான கடல் பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக நிறம் மாறி காணப்படுகிறது.

கடற்கரையை ஒட்டிய அலை அடிக்கும் பகுதிகள் செம்மண் நிறமாகவும் காட்சி தருகிறது. பெரும் மழை பெய்து ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி சேறு சகதிகளுடன் கடலில் கலந்தால் எப்படி இருக்குமோ அதைவிட மேலாக நிறம் மாறி கடலின் தன்மை மாறி காணப்படுகிறது.

மேலும் இந்த தண்ணீர் மணலுடன் கலந்த பின்னர் அந்த பகுதியில் நிறமாற்றம் குறைகிறது. பின்னர் மீண்டும் அந்த பகுதியில் நிறமாற்றம் தொடர்ந்து ஏற்படுகிறது. இது கடற்கரையோர மக்களையும், மண்டைக்காடு புதூர் கடற்கரைக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளையும் கவலை கொள்ள செய்துள்ளது. தொழிற்சாலை கழிவுகள் கடலில் கலப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது குறித்து புதூரை சேர்ந்த மீனவர்கள் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் இப்போது பெருமழை இல்லை. ஆறுகளில் வெள்ளம் இல்லை. வேறு எங்கிருந்தும் கழிவு நீர் கடலில் கலக்கவில்லை. தொழிற்சாலை கழிவுகள் வெளியேற்றி அது கடலில் கலப்பதால் தான் இந்த மாற்றம் வருகிறது. அப்படி என்றால் கடல் மாசுபட்டு விட்டால் ஒட்டுமொத்த நிலப்பகுதியில் சுற்றுச்சூழ லும் கெட்டுவிடும். எனவே ஆபத்தான கழிவுகள் கடலில் கலப்பதை தடுக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மீனவர்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News