கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மறு விண்ணப்பம் செய்ய இ-சேவை மையத்தில் குவிந்த பெண்கள்
- உதவி மையங்களில் தினமும் கூட்டம் அலைமோதி வருகிறது.
- இ- சேவை மைய ஊழியர்கள் பொது மக்களின் விண்ணப்பங்களை சரி பார்த்து மீண்டும் விண்ணப்பித்தனர்.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் சுமார் 4 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் பெரும்பாலான நபர்களுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு உள்ளது.
ஆனால் ஒரு சிலரது விண்ணப்பங்கள் நிராக ரிக்கப்பட்டது. அதற்கான தகவல் செல்போனில் குறுஞ்செய்தி மூலமாக அனுப்பப்பட்டு உள்ளது. இது தொடர்பாக உரிய ஆவணங்களை காண்பித்து மீண்டும் விண்ணப்பித்துக் கொள்ள அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
கலைஞர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான விவரங்கள் தெரிந்து கொள்ள நாகர் கோவில் கலெக்டர் அலு வலகம், பத்மநாபபுரம் சப்- கலெக்டர் அலுவலகம், நாகர்கோவில் ஆர்.டி.ஓ. அலுவலகம், அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, கிள்ளியூர், திருவட்டார் தாலுகா அலுவல கங்களில் உதவி மையமும் திறக்கப்பட்டு உள்ளது. இந்த உதவி மையங்களில் தினமும் கூட்டம் அலைமோதி வருகிறது.
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை பொது மக்கள் அறிந்து கொள்ள உதவி மையங்களில் குவிந்து வருகிறார்கள்.வருமான வரி கட்டுதல், கார் மற்றும் ஏற்கனவே அரசு உதவித்தொகை பெரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் கூட்டம் அலைமோதியது. இ- சேவை மையத்தில் மறு விண்ணப்பம் செலுத்து வதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இ- சேவை மைய ஊழியர்கள் பொது மக்களின் விண்ணப்பங்களை சரி பார்த்து மீண்டும் விண்ணப்பித்தனர்.
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை முறை யாக தெரிவித்த பின் னர் மறுபடியும் விண்ணப்பிக்கப்பட்டது. இதனால் இ- சேவை மையத்தில் பெண்கள் கூட்டம் இன்று அதிகமாக காணப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.