கடலில் கரை ஒதுங்கிய மீன்களை பிடிக்க குவிந்த இளைஞர்கள்
- கீழமணக்குடி முதல் சங்குத்துறை வரை கரை ஒதுங்கியது
- வௌ மீன்கள் அதிகளவு சிக்கியது
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது.
கடற்கரை கிராமங்களி லும் மழை கொட்டி தீர்த்து வருகிறது. கடற்கரை பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர் கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன் வளத்துறை அதிகாரிகள் எச்சரித்திருந்தனர். இதை யடுத்து ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையுள்ள கடற்கரை கிராமங்களில் பெரும்பாலான மீனவர்கள் கடந்த சில நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை.
மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் மீன்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஒரு சில கட்டுமரம் மீனவர்கள் மட்டும் மீன்பிடிக்க சென்ற னர். அவர்கள் வலையில் குறைந்த அளவு மீன்கள் மட்டுமே சிக்கியது. குறை வான அளவு மீன்கள் விற்ப னைக்கு வந்ததால் விலை அதிகமாக இருந்தது.
குளச்சல் பகுதிகளில் மீன்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் குமரி கடல் பகுதியில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக கடலுக்குள் இருந்த மீன்கள் கரை ஒதுங்கியது. கீழ மணக்குடி முதல் சங்குதுறை கடற்கரை வரை மீன்கள் கரை ஒதுங்குவதாக தகவல் பரவியது.
இதையடுத்து அதன் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் கடந்த இரண்டு நாட்களாக கடற்கரை பகுதியில் குவிந்த வண்ணம் உள்ளனர். இத னால் அந்த பகுதிகளில் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று மாலையிலும் ஆயி ரக்கணக்கான இளைஞர்கள் கடற்கரை பகுதிகளில் குவிந்திருந்தனர். ராட்சத அலைகளில் மீன்கள் கரை பகுதிக்கு வருகிறது.
பின்னர் அந்த அலை திரும்ப கடலுக்குள் செல்லும்போது மீன்களை வாலிபர்கள் கையால் பிடித்து வருகிறார்கள். வாலிபர்கள் கையில் ஏராளமான மீன்கள் சிக்கி வருகிறது. குறிப்பாக அதிக அளவு வெளமீன்கள் சிக்கி உள்ளது. இந்த பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக வாலிபர்கள் கையில் டன்கணக்கில் வெளமீன்கள் சிக்கி வருவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாலிபர்கள் கையில் தினமும் டன் கணக்கில் மீன்கள் சிக்கிவரும் தகவல் அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. இதையடுத்து இன்று காலை யிலும் ஏராளமான வாலி பர்கள் கடற்கரையில் குவிந் திருந்தனர்.
இது குறித்து வாலிபர்கள் கூறுகையில், கடற்கரையில் மீன்கள் கரை ஒதுங்குவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நாங்கள் இங்கு வந்தோம். அப்போது மீன்கள் கரை ஒதுங்குவதை பார்த்து ரசித்து கொண்டிருந்தோம்.அப்போது எங்களுக்கு மீன்களை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
இதையடுத்து கரைக்கு வந்த மீன்களை கையால் பிடித்தோம். அதிகளவு மீன்கள் எங்களிடம் சிக்கி உள்ளது. சிக்கிய மீன்களை வீட்டிற்கு கொண்டு சென்று சமைத்து சாப்பிடுவதுடன் நண்பர்கள் வீடுகளுக்கும் பகிர்ந்து கொடுக்க உள் ளோம். மீன்கள் கரை ஒதுங்குவதற்கான காரணம் எங்களுக்கு தெரியவில்லை என்றனர்.
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், கடல் பகுதி யில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக கடலில் குளிர்ந்த தண்ணீர் ஏற்பட்ட தால் வெள மீன்கள் கரை ஒதுங்கி வருவதாக தெரிவித்தனர்.