உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு நாளை படகு போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாக தொடங்கும்
- பகவதி அம்மன் கோவில் தேரோட்டத்தில் சுற்றுலா பயணிகள் பங்கேற்க ஏற்பாடு
- கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாகத்திரு விழாவை யொட்டி நாளை தேரோட்டம் நடக்கிறது.
கன்னியாகுமரி. மே.31-
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாகத்திரு விழாவை யொட்டி நாளை தேரோட்டம் நடக்கிறது. காலை 8-30 மணிக்கு மேல் 9 மணிக்குள் திருத்தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.
இந்த தேரோட்டத்தில் விவேகானந்தர் நினைவுமண்டபம் மற்றும் விவேகானந்த கேந்திர தொழிலாளர்கள் குடும்பத்துட ன்பங்கேற்பதற்கு வசதியாகவும் சுற்றுலாப் பயணிகள் இந்த தேர் திருவிழாவில் கலந்து கொண்டு தேர் இழுப்பதற்கு வசதியாகவும் நாளை காலை 8 மணிக்கு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகுபோக்கு வரத்து தொடங்குவதற்கு பதிலாக 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கு கிறது. இந்த தகவலை கன்னியா குமரி விவேகானந்த கேந்திர நிர்வாக அதிகாரி அனந்தஸ்ரீ பத்மநாபன் தெரிவித்து உள்ளார்.