குமரியில் தனியார் ஸ்கேன் மையங்களில் கலெக்டர் திடீர் ஆய்வு
- குழித்துறை அரசு ஆஸ்பத்திரியையும் பார்வையிட்டார்
- பிரசவ பிரிவு, பிரசவித்த தாய்மார்கள் பிரிவு, ரத்த சுத்திகரிப்பு மையம், குழந்தைகள் பிரிவு உள்ளிட்ட இடங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் தனியார் ஸ்கேன் மையங்களை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார். குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் குமரி மாவட்ட மருத்துவம் மற்றும் பொறுப்பு அலுவலர் ஆகியோர் அடங்கிய குழுவி னர் நாகர்கோவில், மார்த் தாண்டம் ஸ்கேன் மையங் கள், குழித்துறை அரசு ஆஸ்பத்திரி ஆகிய இடங் களில் ஆய்வு செய்தனர். இதில் ஸ்கேன் மையங்களுக்கான லைசென்சு நகல் ஸ்கேன் மைய நுழைவிடத் தில் பார்வையாளர்களுக்கு தெரியும்படி வைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் முதல் தளத்தில் ஸ்கேன் அறையின் அருகேயே நோயாளிகளுக்கான கழிவறை அமைக்க வேண்டும் என்று அறிவுறுத் தப்பட்டது. 'படிவம் எப்' முறையாக பராமரிக்கப்பட வேண்டும் ஸ்கேன் மையத் தில் இடவசதி குறைவாக இருப்பதால் தக்க நடவ டிக்கை எடுத்து அதனை சரி செய்ய வேண்டும். மேலும் அனைத்து ஆவணங்களும் சரியாக பராமரிக்க வேண் டும் என்று அதன் பணியா ளர்களுக்கும், நிர்வாகத்திற்கும் அறிவுறுத்தப்பட்டது.
குழித்துறை அரசு ஆஸ்பத்திரியிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பொது கழிவுநீர் வெளியேற்ற பொதுப்பணித் துறை மற்றும் குழித்துறை நகராட்சிக்கு தக்க அறிவுரை கூறுவதாக கலெக்டர் உறுதி அளித்தார். மேலும் அரசு மருத்துவமனையில் முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் ஆகியவற்றின் எண்ணிக் கையை உயர்த்த வலியுறுத்தி னார்.
பின்னர் அங்கு அனைத்து மருத்துவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஆஸ்பத்திரியின் செயல்பாடு களை முன்னேற்றவும், அனைத்து ஸ்கேன்களையும் ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளவும் கலெக்டர் அறிவுறுத்தினார். பிரசவ பிரிவு, பிரசவித்த தாய்மார்கள் பிரிவு, ரத்த சுத்திகரிப்பு மையம், குழந்தைகள் பிரிவு உள்ளிட்ட இடங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.