உள்ளூர் செய்திகள்

கிறிஸ்துராஜ்.

நாகர்கோவில் ஆட்டோ டிரைவர் கொலையில் தந்தை-மகன் கைது

Published On 2023-02-26 08:23 GMT   |   Update On 2023-02-26 08:23 GMT
பணத்தகராறில் தீர்த்து கட்டியது அம்பலம்

கன்னியாகுமாரி, பிப்.26-

நாகர்கோவில் ராமன் புதூர் கார்மல் தெரு பகுதி யைச் சேர்ந்தவர் கிறிஸ்து ராஜ் (வயது 54), ஆட்டோ டிரைவர்.

இவர் கடந்த 16-ந்தேதி வீட்டில் இருந்து மாயமானார். இதுகுறித்து அவரது மனைவி மேரி லதா, நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலை யில் கிறிஸ்துராஜ் ஆசாரி பள்ளம் இந்திராநகர் பகுதியில் காயங்களுடன் கிடந்தார். போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த கிறிஸ்துராஜ் பரிதாபமாக இறந்தார். கிறிஸ்துராஜின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கிறிஸ்துராஜை கொலை செய்தவர்களை கைது செய்தால் மட்டுமே அவரது உடலை பெற்றுக் கொள்வோம் என்று தெரி வித்தனர்.

இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். குற்ற வாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட் டது. தனிப்படை போலீ சார் அந்த பகுதி யில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை ஆய்வு செய்த னர். மேலும் செல் போன் உதவியுடனும் துப்பு துலக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது வடக்கு கோணம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (21) என்பவரை போலீசார் பிடித்தனர். பிடிபட்டவரிடம் விசாரனை நடத்திய போது கிறிஸ்துராஜை தாக்கியதை ஒப்புக் கொண்டார்.இதையடுத்து போலீசார் அருண்குமாரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அருண்குமார் போலீசாரிடம் கூறியதாவது:-

நான் கொத்தனாராக வேலை பார்த்து வரு கிறேன். சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள மதுக்கடைக்கு கிறிஸ்து ராஜை அழைத்து சென்றேன். பின்னர் மது அருந்திவிட்டு வீட்டிற்கு திரும்பிய போது ஆட்டோவிற்கு வாடகை கொடுப்பதற்காக என்னிடம் உள்ள பணத்தை அவரிடம் கொடுத்தேன். அவர் தனது பர்ஸ்சை எடுத்து சில்லறை எடுத்தபோது அவரது பர்சில் அதிகமான பணம் இருந்தது.

இதையடுத்து அவரிடம் உள்ள பணத்தை எடுக்க திட்டம் தீட்டினேன். உடனே கிறிஸ்துராஜிடம் வாட்டர் கேன் எடுக்க வேண்டும் என்று கூறி ஆசாரிப்பள்ளம் இந்திரா நகர் பகுதிக்கு அழைத்துச் சென்றேன். அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அவரது பர்சை பறிக்க முயன்றேன். ஆனால் அவர் பர்சை விடவில்லை. இறுக்கமாக பிடித்துக் கொண்டார். இதையடுத்து அவரது கழுத்தை பிடித்து நெரித்தேன். அவர் என்னிடமிருந்து தப்பி ஓட முயன்றார். துரத்தி சென்று அவரை தாக்கினேன். அப்போது கீழே விழுந்தார். பின்னர் எனது காலால் அவரது கழுத்தில் மிதித்தேன். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விட்டார். பின்னர் பணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து எனது தந்தைக்கு போன் செய்தேன். அவர் என்னை வந்து அழைத்து சென்றார். நான் தாக்கியதில் கிறிஸ்துராஜ் இறந்து விடுவார் என்று எதிர் பார்க்கவில்லை.

இவ்வாறு அவர் கூறி னார்.

இந்த வழக்கு தொடர்பாக போலீசார் அருண்குமாரின் தந்தை தங்கராஜிடமும் விசாரணை மேற்கொண்டனர்.பின்னர் அவரை கைது செய்த போலீசார் அருண்குமார், தங்கராஜ் இருவரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News