குலசேகரத்தில் பள்ளி மாணவன் வேன் சக்கரத்தில் சிக்கி பலியானது எப்படி?
கன்னியாகுமாரி, மார்ச். 14 -
பொன்மனை அருகே சமாதிநடையைச் சேர்ந்தவர் சதீஸ்குமார். இவரது மனைவி நந்தினி. சதீஸ் குமார் வெளிநாட்டில் ஒரு கட்டிட கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகன்கள் சபரீஷ் (வயது 9), சூரிய நாத் (7). இருவரும் குலசேகரம் படநிலம் பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு மற்றும் 1 -ம் வகுப்பு படித்து வந்தனர்.
தற்போது பிளஸ்-2 தேர்வுகள் தொடங்கி யுள்ள நிலையில் மாணவர் களுக்கு பிற்பகலில் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், சபரீஷ் மற்றும் சூரிய நாத் ஆகியோர் நேற்று பிற்பகலில் வழக்கம் போல் செல்லும் தனியார் வேனில் பள்ளிக்குச் சென்று விட்டு மாலை 4.30 மணி அளவில் அதே தனியார் வேனில் வீட்டின் அருகில் வந்து இறங்கினர்.
அப்போது சபரீஷ், சூரியநாத் ஆகியோர் வேனின் முன்பக்கம் வழியாக சாலையைக் கடந்துள்ளனர். இதனைக் கவனிக்காத வேன் டிரைவர் வேனை இயக்கியுள்ளார். இதில் சபரீஷ், சூரிய நாத் ஆகிய இருவரும் வேனின் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குழந்தைகளை அழைத்துச் செல்லும் வகையில் சாலையின் எதிரே வந்து கொண்டிருந்த மாணவர்களின் தாய் நந்தினியின் கண்முன்னே நடந்தது. அப்போது அவர் அலறித்துடித்த வண்ணம் வேனில் அருகில் ஓடிச்சென்றார்.
இதையடுத்து படுகாய மடைந்த 2 மாணவர் களையும் உடனடியாக ஒரு ஆட்டோவில் ஏற்றி குலசேகரத்திலுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதில் ஆஸ்பத்திரியில் சூரிய நாத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர். மேலும் சபரீசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள். வேன் டிரைவர் பொன்மனையைச் சேர்ந்த ஜார்ஜ் (52) என்பவரிடம் விசாரணை நடத்தி வரு கின்றனர். பலியான மாணவன் சூரியநாத் உடல் பிரேத பரி சோதனைக்காக குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.