உள்ளூர் செய்திகள்

கொட்டாரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய போது எடுத்த படம்.

கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணம் வாங்கியதற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியது

Published On 2023-03-17 07:59 GMT   |   Update On 2023-03-17 07:59 GMT
  • லஞ்ச ஒழிப்பு போலீசார் 7 மணி நேரம் விசாரணை
  • போலீசார் மடக்கி பிடித்தனர்.

கன்னியாகுமரி:

கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவிற்கு லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரமா, சிவசங்கரி மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றனர் அப்போது சார் பதிவாளர் பொறுப்பு அன்வர்அலி வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார்.

கொட்டாரத்தில் இருந்து ஆட்டோவில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த அன்வர்அலியை மந்தாரம்புதூர் பகுதியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அன்வர் அலியிடம் லஞ்ச ஒழிப்புபோலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அவரிடம் இருந்து ரூ.41 ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். மாலை 6 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 1 மணி வரை நீடித்தது.நேற்று ஒரே நாளில் 30 பத்திர பதிவுகள் நடந்துள்ளது. அதில் ஏதாவது பணம் பெறப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் பணம் வாங்கிய தற்கான சில ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியுள்ளனர். கடந்த 15 நாட்களாக தான் சார்பதிவாளர் பொறுப்பு பணியை அன்வர்அலி கவனித்து வருகிறார். இந்த நிலையில் அவர் லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கி யிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அன்வர்அலி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு போலீ சார் பரிந்துரை செய்துள்ளனர். எனவே அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. நேற்று முன்தினம் வடசேரி கிராம நிர்வாக அலுவலகத்தில் பெண் கிராம நிர்வாக அதிகாரி ஒருவரிடம் இருந்து ரூ.17,743 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது சார்பதி வாளர் அலுவ லகத்திலும் பணம் சிக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News