உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு பதிலாக வேறு ரெயிலில் ஏறிய பயணிகள்

Published On 2023-03-17 07:49 GMT   |   Update On 2023-03-17 07:49 GMT
  • நாகர். ரெயில் நிலையத்தில் முறையான அறிவிப்பு வெளியிடாததால் நடந்த சோகம்
  • அபாய சங்கிலியை பிடித்து இழுத்து பாதியில் நிறுத்தினர்.

நாகர்கோவில்:

கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வழியாக சென்னைக்கு தினமும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரியில் இருந்து தினமும் மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.55 மணிக்கு இந்த ரயில் நாகர்கோவில் ரயில் நிலையத்தை வந்து அடையும். பின்னர் இங்கிருந்து புறப்பட்டு சென்னை செல்லும். இந்த ரயிலில் தினமும் கன்னியாகுமரி, நாகர்கோவிலில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்கி றார்கள். இதனால் கன்னி யாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் தினமும் கூட்டம் நிரம்பி வழியும்.

நேற்றும் மாலை நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறுவதற்காக ஏராளமான பொதுமக்கள் காத்திருந்தனர். முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் ஏறுவதற்காக ரயிலின் பின்பகுதி மற்றும் முன்ப குதியில் பிளாட்பாரங்களில் பொதுமக்கள் காத்திருந்தனர். முன்பதிவு செய்யப் பட்ட பெட்டிகளில் ஏறுவ தற்கும் பொதுமக்கள் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது கன்னியா குமரியில் இருந்து 5.45 மணிக்கு திப்ரூகர் செல்லும் ரயில் நாகர்கோவில் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இதை பார்த்த பொதுமக்கள் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் என்று சில பயணிகள் அந்த ரயிலில் முண்டியடித்துக் கொண்டு ஏறினார் கள். முதல் பிளாட்பாரத்தில் வந்திருந்த எக்ஸ்பிரஸ் ரயில் சிறிது நேரத்தில் இங்கிருந்து புறப்பட்டு சென்றது.

ஒழுகினசேரி பகுதியில் ரயில் திரும்பிய போது பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். கன்னியா குமரி எக்ஸ்பிரஸ் ரயி லுக்கு பதிலாக வேறு ரயிலில் ஏறியதை உணர்ந்த பயணிகள் அபாய சங்கிலி யை பிடித்து இழுத்தனர்.இதைத் தொடர்ந்து ரயில் நடுவழியில் நின்றது. உடனடியாக ரயிலில் ஏறிய பயணிகள் அதிலிருந்து இறங்கினார்கள்.

பின்னர் அங்கிருந்து தண்டவாளம் வழியாக ரயில் நிலையத்திற்கு விரைந்து வந்தனர். ரயில் நடுவழியில் நின்றதையடுத்து ரயில்வே அதிகாரிகளும் போலீசாரும் அங்கு சென்று விசாரித்தனர். அப்போதுதான் ரயில் பயணிகள் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் என்று தவறுதலாக ஏறி விட்டதாக கூறினார்கள். இதனால் நேற்று மாலை ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில் கன்னியா குமரி எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் ரயில் நிலை யத்தில் உள்ள முதலாவது பிளாட்பாரத்திற்கு வந்து சேர்ந்தது. திப்ரூகர் ரயிலில் இருந்து இறங்கி வந்த பயணிகள் இங்கு வந்து சேருவதற்கு முன்னதாகவே கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட தயாரானது. ரயில் பயணிகள் அவசரமாக ஓடி வந்து ரயிலை பிடித்தனர். பின்னர் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.

இதுகுறித்து ரயில் பயணிகள் கூறுகையில், ரயில் நிலையத்தில் சரி யான அறிவிப்புகள் வெளி யிடப்படவில்லை. கன்னியா குமரி எக்ஸ்பிரஸ் ரயில் வரக்கூடிய நேரத்தில் கன்னியாகுமரியில் இருந்து திப்ரூகர் ரயில் வந்தது. அறிவிப்புகள் வெளியிடாததால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் என்று நினைத்து ரயிலில் ஏறி விட்டதாகவும் ரயில் நிலையத்தில் முறையான அறிவிப்புகளை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News