உள்ளூர் செய்திகள்

கரூரை தொழில் மாவட்டமாக உருவாக்க அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்-கலெக்டர் வேண்டுகோள்

Published On 2022-08-01 06:48 GMT   |   Update On 2022-08-01 06:48 GMT
  • கரூரை தொழில் மாவட்டமாக உருவாக்க அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
  • கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

கரூர்:

கரூர் மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து தொழில் நிறுவன மனித வள மேலாளர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது: வாழ்ந்து காட்டுவோம் திட்டம் கரூர் மாவட்டம் குளித்தலை வட்டாரத்தில் 13, கரூர் வட்டாரத்தில் 14 என 27 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரகப் பகுதிகளில் தொழில் மேம்பாடு, நிதிசேவைகளுக்கு வழிவகை செய்தல், வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவற்றின் மூலம் ஊரக சமுதாயத்தில் நிலையான வளர்ச்சி, வளத்தினை உருவாக்கி பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தினால் கிராமப்புற பெண்கள் அவர்களின் வசிப்பிடங்கள் அருகிலேயே சிறு தொழில் கூடங்கள் அமைத்து செயல்படுத்தினால் அவர்களது குடும்ப வளர்ச்சி, பொருளாதாரம் மேம்படுத்துவதற்கு உறுதுனையாக இருக்கும். ஆகையால், தொழில் நிறுவனங்கள் சிறு தொழில் கூடங்கள் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்படும். ஆகவே, கரூர் மாவட்டத்தை தொழில் மாவட்டமாக உருவாக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.

தமிழ்நாடு வாழ்வாதார திட்ட இயக்குநர் வாணி ஈஸ்வரி, மாவட்ட தொழில் மைய மேலாளர் மணிகண்டன், வாழ்ந்துகாட்டுவோம் மாவட்ட செயல் அலுவலர் ஆருண், இந்திய தொழில் கூட் டமைப்பு தலைவர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News