உள்ளூர் செய்திகள்

குறைதீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்காத 2 அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்-கலெக்டர் நடவடிக்கை

Published On 2022-07-09 08:35 GMT   |   Update On 2022-07-09 08:35 GMT
  • குறைதீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்காத 2 அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
  • 3 இயந்திரங்களில் ஒன்று இயங்கவில்லை

கரூர்:

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்தனர். அப்போது கூனம்பட்டியை சேர்ந்த விவசாயி முத்துசாமி பேசும் போது, நில உரிமை சான்றிதழ் தற்போது வழங்கப்படுவதில்லை. வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் நில உரிமைச்சான்று கேட் கின்றனர். எனவே விஏஓக்கள் நில உரிமை சான்று வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

இதற்கு கலெக்டர், நில உரிமை சான்று அங்கீகாரம் இல்லாத ஒன்று. இதனை ஒரு வழக்கமாக ஏற்படுத்தி விட்டனர். அடங்கல் இருந்தால் போதுமானது. இனி நில உரிமை சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது. வேறு அலுவலகங்ளில் நில உரிமை சான்று கேட்கமாட்டார்கள் என்றார்.

பணிக்கம்பட்டியை சேர்ந்த விவசாயி ராஜா கூறும்போது, குளித்தலை வேளாண்மை பொறியியல் துறையில் 3 உழவு இயந்திரங்கள் உள்ளன. நான் பணம் கட்டி ஒரு வாரத்திற்கு மேலாகி விட்டது. நான் இரு தனியார் இயந்திரங்களை பயன்படுத்திய நிலையில் மேலும் ஒரு இயந்திரத்திற்காக பணம் கட்டி இன்னும் நேரம் வழங்காமல் உள்ளனர் என்றார்.

இதற்கு கலெக்டர், குளித்தலை வேளாண் பொறியியல் அலுவலரை பதில் அளிக்க அழைக்க, அவர் விடுப்பு என கரூர் அலுவலர் ஒருவர் பதிலளித்தார். மேலும் 3 இயந்திரங்களில் ஒன்று இயங்கவில்லை. மற்றொன்று பணிமனையில் உள்ளது. ஒரு இயந்திரம் தான் பயன்பாட்டில் உள்ளது என்றார்.

யாரிடம் விடுப்பு தெரிவித்தார். விவசாயிக்கு தேவைப்படும் போது வழங்குவதற்குதான் இயந்திரம் அதனை ஏன் தயாராக வைக்கவில்லை. கூட்டத்தில் பங்கேற்காத அலுவலர் மற்றும் இயந் திரத்தை தயாராக வைக்காத அலுவலர் ஆகிய இரு வேளாண் அலுவலர்களுக்கு 17பி விளக்கம் கேட்டு சார்ஜ் மெமோ அனுப்ப உத்தரவிட்டார்.

Tags:    

Similar News