உள்ளூர் செய்திகள்

நீண்ட லாரியால் போக்குவரத்து பாதிப்பு

Published On 2023-11-15 08:19 GMT   |   Update On 2023-11-15 08:19 GMT
  • தவுட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காற்றாலை இறக்கை கொண்டு சென்ற நீண்ட லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
  • வாகன ஓட்டிகளும், பேருந்து பயணிகளும் அவதிக்குள்ளானார்கள்

கரூர்,

பெங்களூரு பகுதியில் இருந்து மதுரை நோக்கி சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மிக நீளமான லாரியில், சுமார் 360 அடி நீளமுள்ள காற்றாலை மின்விசிறி இறக்கைகளை ஏற்றிக் கொண்டு கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்று பாலத்தில் லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை முந்திக்கொண்டு எந்த வாகனமும் செல்ல முடியாத அளவுக்கு நீளமானதாக இருந்தது. தவுட்டுப்பாளையம் போலீஸ் செக் போஸ்ட் அருகே வந்தபோது நீளமான அளவிலான காற்றாலை விசிறி இறக்கைகளை ஏற்றி சென்ற லாரி செல்ல முடியாமல் நின்றது.இதனால் நீண்ட நேரம் லாரிக்கு பின்னால் ஏராளமான வாகனங்கள், பரமத்தி வேலூர் வரை காவிரி ஆற்றுப் பாலத்தில் அணிவகுத்து நீண்ட நேரம் நின்றன.

இதனால் வாகன ஓட்டிகளும், பேருந்து பயணிகளும், மருத்துவ மனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்ல ப்பட்ட நோயாளிகளும் பெரும் அவதிக்குள்ளா னார்கள். நீண்ட நேரத்திற்கு பிறகு லாரி நகர்த்தப்பட்டது. இதன் காரணமாக பின்னால் நின்ற வாகனங்கள், தவிட்டுப்பாளையம் சர்வீஸ் சாலை வழியாக கடந்து சென்றன. இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News