குலசேகரன்பட்டினம் கோவில் தசரா திருவிழா: இன்று இரவு விசுவகர்மேசுவரர் கோலத்தில் எழுந்தருளும் முத்தாரம்மன்
- விரதம் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தங்களது வலது கையில் கோவிலில் இலவசமாக வழங்கும் காப்பு என்ற மஞ்சள் கயிறு வாங்கி கட்டிக்கொண்டனர்.
- காப்பு கட்டிய பின்பு வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வாங்குவார்கள்.
உடன்குடி:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெருந்திருவிழாவில் இன்று 2-ம் திருநாள் ஆகும். இன்று காலை முதல் சுவாமிக்கு சிறப்பு அபிஷே கங்களும், மாலை 3 மணி முதல்சமய சொற்பொழிவும், தொடர்ந்து இரவு 8 மணிக்கு பரதநாட்டியம் நடைபெறும்.
இரவு 9 மணிக்கு அன்னை முத்தாரம்மன் கற்பக விருட்சகவாகனத்தில் விசுவ கர்மேஸ்வரர் திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.
ஏராளமான பக்தர்கள் இன்றும் காலையிலேயே கடற்கரைக்கு வந்துகடல் நீர் தீர்த்தம் எடுத்துச் சென்றனர்.
இதைப்போல விரதம் இருந்து வந்த ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கோவி லுக்கு வந்து தங்களது வலது கையில் கோவிலில் இலவச மாக வழங்கும் காப்பு என்ற மஞ்சள் கயிறு வாங்கி கட்டிக்கொண்டனர்.
காப்பு கட்டிய பின்பு வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வாங்குவார்கள். காணிக்கை களை 10-ம் நாள் அன்று கோவிலில் கொண்டு சேர்ப்பார்கள்.
தசரா திருவிழா ஏற்பாடு களை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு இந்து சமய அறநிலை யத்துறை யினரும் செய்து வருகின்றனர்.