உள்ளூர் செய்திகள்

முனியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-01-27 08:21 GMT   |   Update On 2023-01-27 08:21 GMT
  • புனிதநீர் அடங்கிய கடம் யாகசாலையில் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது.
  • விழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பூதலூர்:

திருக்காட்டுப்பள்ளி ஒன்பத்துவேலி லயன் கரை பகுதியில் சூடாமணி முனியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

புதிதாக பிரம்மாண்டமாக சூடாமணி முனியாண்டவர் சிலை அமைக்கப்பட்டு பரிவார தெய்வங்களான கருப்புசாமி, மதுரை வீரன், நாகாத்தம்மன், ஆகிய சந்நிதிகளுக்கு புதுவர்ணம்பூசி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி கோவிலின் அருகில் யாக சாலை அமைக்கப்பட்டு செம்மேனிநாத சிவாச்–சாரியார் தலைமையில் கணபதி பூஜையுடன் யாகசாலை தொடங்கியது. காவிரி ஆற்றில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் அடங்கிய கடம் யாகசாலையில் வைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடந்தது.

பின்னர் புனித நீர் அடங்கிய கடம் நாதஸ்வர இன்னிசை முழங்க புறப்பட்டு சூடாமணி முனியாண்டவருக்கு குடமுழுக்கு நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரவு வாணவேடிக்கை நடைபெற்றது.

குடமுழுக்கு விழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News