கும்பகோணம் புனித அலங்கார அன்னை பேராலய தேர்பவனி
- ஆடம்பர தேர்பவனியை ஆயர் பிரார்த்தனை செய்து தொடங்கி வைத்தார்.
- இன்று மாலை 6 மணிக்கு கொடியிறக்க நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.
கும்பகோணம்:
கும்பகோணத்தில் உள்ள புனித அலங்கார அன்னை பேராலய ஆண்டு பெருவிழா கடந்த 6-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து தினமும் மாலை 6 மணிக்கு திருப்பலியும், சிறிய தேர்பவனியும், பல்வேறு தலைப்புகளில் அருட்தந்தையர்களால் மறையுரையும் நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று நடைபெற்றது.முன்னதாக ஆயர் அந்தோணிசாமி தலைமையில் திருப்பலி நடைபெற்றது.
திருப்பலியில் ஆயர் மறையுரை ஆற்றினார்.தொடர்ந்து, புனித அலங்கார அன்னை ஆடம்பர தேர்பவனியை ஆயர் பிரார்த்தனை செய்து தொடங்கி வைத்தார்.
தேர்பவனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேராலயத்தை வந்தடைந்தது.
இன்று காலை ஆயர் அந்தோணிசாமி தலைமையில் திருப்பலி நடைபெற்றது.தொடர்ந்து, மாலை 6 மணிக்கு கொடியிறக்க நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.
விழா ஏற்பாடுகளை அலங்கார அன்னை பேராலய பங்குத்தந்தை பிலோமின்தாஸ், உதவி பங்குத்தந்தை எட்மண்ட் லூயிஸ் மற்றும் பங்கு பேரவை உறுப்பினர்கள், அன்பியங்கள், பிரண்ட்ஸ் ஆப் ஜீசஸ் பங்கு மக்கள் செய்திருந்தனர்.