ஆறுமுகநேரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் - திருச்செந்தூர் நீதிபதி பங்கேற்பு
- திருச்செந்தூர் வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் ஆழ்வார்தோப்பு கிராம உதயம் அமைப்பின் சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் ஆறுமுகநேரியில் நடந்தது.
- நிகழ்ச்சியில் கிராம உதயம் சார்பில் 200 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
ஆறுமுகநேரி:
திருச்செந்தூர் வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் ஆழ்வார்தோப்பு கிராம உதயம் அமைப்பின் சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் ஆறுமுகநேரியில் நடந்தது. திருச்செந்தூர் சார்பு நீதிபதியும், வட்ட சட்டப்பணிகள் குழு தலைவருமான வசந்குமார் வழிகாட்டுதலின்படி நடந்த இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர் குற்றவியல் நீதிமன்ற நீதித்துறை நடுவர் வரதராஜன் கலந்து கொண்டு பேசினார். மேலும் வக்கீல் சங்க தலைவர் ஜேசுராஜ், துணைத்தலைவர் முத்துக்குமார், அரசு வக்கீல் சாத்ராக், மூத்த வக்கீல்கள் எட்வர்ட், முத்துவேல், பிரித்திவிராஜ், கிராம உதயம் மேலாளர் வேல்முருகன் ஆகியோர் பேசினர்.
முகாம் ஏற்பாடுகளை கிராம உதயம் அலுவலர் ஆனந்த், திருச்செந்தூர் சட்ட உதவி மைய நிர்வாக அலுவலர் அருள்மணிராஜ் மற்றும் தன்னார்வலர் ராஜேஷ் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் கிராம உதயம் சார்பில் 200 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.