எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு
- பெண்ணுரிமை பாதுகாப்புக்காக நிறைய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
- சட்டப்பணிகள் ஆணைகள் குழு என்பது பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதித்துறையே இலவசமாக வக்கீலை நியமிக்கும்.
நெல்லை:
நெல்லை வண்ணார் பேட்டை எப்.எக்ஸ். என்ஜி னீயரிங் கல்லூரியில் இளை ஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் கல்லூரி முதல்வர் வேல்முருகன் கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார். உதவி பேராசிரியர் சதீஷ் குமார் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக நெல்லை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் திரிவேணி கலந்து கொண்டு பேசியதாவது:-
சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். பெண்ணுரிமை பாது காப்புக்காக நிறைய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. பெண்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க ப்பட்டு ள்ளது. பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக போக்சோ போன்ற சட்டங்கள் உள்ளன.
எனவே, சட்டத்தை பற்றி அனைவரும் தெரிந்து கொள்வது மிக அவசியம். குடும்ப நல சட்டம் பிரிவு -14 என்பதே பெண்ணுரிமை பாது காப்பதற்காக கொண்டு வரப்பட்டது. ஒரு பெண் தான் சார்ந்த முடிவுகளை தானே எடுப்பதற்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும். அதற்கு சட்டம் பாதுகாப்பு அளிக்கிறது. சமூகம் நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசி னார்.
அதனைத்தொடர்ந்து மூத்த வக்கீல் பிரபாகர் பேசுகையில், சட்டப்பணிகள் ஆணைகள் குழு என்பது பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதித் துறையே இலவசமாக வக்கீலை நியமிக்கும். இந்த அமைப்பில் எந்த பிரச்சி னையாக இருந்தாலும் இங்கு அணுகலாம்.
அவர்கள் சமரச நடுவர் ஒருவரை நியமித்து இரு தரப்பினரையும் அழைத்து பேசி பிரச்சினையை சுமூகமாக தீர்வு காண்பார்கள். இதில் பெண்கள், பட்டியலினத்த வர், மாற்று திறனாளிகள் ஆகியோருக்கு இலவசமாக சட்ட உதவி வழங்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் வேல்முருகன், வளாக மேலாளர் பேராசிரியர் சகாரியா காபிரியல், உதவி பேராசிரியர் சதீஷ்குமார் மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இளைஞர் செஞ்சிலுவை சங்க செயலாளர் டேவிட் ஐ லிங், அனைத்து சங்க பொறுப்பா ளர் சந்தியாகு ஸ்டீபன் ஆகியோர் செய்திருந்தனர்.