உள்ளூர் செய்திகள்

சேலம் மத்திய சிறையில் செல்போன் ஜாமர் கருவிகள் செயல்பாடு குறித்து சட்டமன்ற கணக்கு குழுவினர் ஆய்வு செய்த காட்சி.

சேலம் மத்திய சிறையில் சட்டமன்ற பொது கணக்கு குழு ஆய்வு

Published On 2022-11-01 10:21 GMT   |   Update On 2022-11-01 10:21 GMT
  • சேலம் மத்திய சிறையில் சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வுசெய்தனர்.
  • அப்போது கைதிகளிடம் அவர்கள் குறைகள் கேட்டனர்.

சேலம்:

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது கணக்கு குழுவினர் தலைவர் செல்வப்பெ ருந்தகை தலைமையில் உறுப்பினர்கள் காந்திராஜன், மாரிமுத்து, வேல்முருகன், ராஜமுத்து, பூண்டி கலைவாணன் மற்றும் மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ, கோவை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி சண்முக சுந்தரம் ஆகியோர் இன்று காலை சேலம் மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டனர். மத்திய சிறையில் அமைக்கப்பட்டு உள்ள ஜாமர் கருவி உள்ளிட்டவற்றை குழுவினர் பார்வையிட்டனர்.

பின்னர் கைதிகளிடம் குறைகள் கேட்டனர். இதனைத் தொடர்ந்து, சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள லேப் மற்றும் நோயாளிகளுக்கு அளிக்கும் சிகிச்சை குறித்து பார்வையிட்டனர். அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, கருப்பூர் ஆதிதிராவிடர் நல விடுதி, சேலம் பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களிலும் ஆய்வு செய்தனர்.

பின்னர் மாலை 3.00 மணிக்கு மேல் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், கலெக்டர் கார்மேகம், ராஜேந்திரன் எம்.எல்.ஏ, சதாசிவம் எம்.எல்.ஏ, மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாராதேவி, கமிஷனர் கிறிஸ்துராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News