உள்ளூர் செய்திகள்

உடலும் மனமும் கட்டுப்பாட்டில் இல்லையென்றால் வாழ்வது வீண்-நடிகர் சிவக்குமார்

Published On 2024-09-01 06:08 GMT   |   Update On 2024-09-01 06:08 GMT
  • பெண்கள்தான் உண்மையான தெய்வங்கள்.
  • குழந்தையை பெற்று எடுப்பவர்கள்தான் பெண்கள்.

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வேதாத்திரிய வாழ்க்கை நெறி என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரைப்பட நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

பெண்கள்தான் உண்மையான தெய்வங்கள். உயிர், உடல் கொடுத்து, தாய் தந்தையரின் ஞானத்தை குழந்தைக்குள் வைத்து, 10 மாதம் சிரமப்பட்டு, குழந்தையை பெற்று எடுப்பவர்கள்தான் பெண்கள்.

இப்படிப்பட்ட பெண்கள் ஒவ்வொருவரும் தெய்வங்கள் தான். இந்த மண்ணில் பிறந்ததற்கும், என்னை பெற்ற தாய்க்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.

எனது 17 வயதில் யோகா செய்ய துவங்கினேன். எனது நாக்கில் காபி, டீ பட்டு 68 ஆண்டுகள் ஆகிறது. கண் மூடினால் மனம் கெடக்கூடாது. இது நானாக உருவாக்கி கொண்ட வாழ்க்கை. அதுதான் தியானம்.

உடம்பும் மனமும் நமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இல்லையெனில் வாழ்வது வீண். வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களைப்பட்ட வேதாத்திரி மகரிஷி மண்சோறு சாப்பிட்டு வாழ்ந்துள்ளார்.

திருக்குறள் நமக்கு மட்டுமின்றி, எதிர்கால தலைமுறைகளாக உள்ள குழந்தைகளுக்கும் பயன்படும். காந்தி, காமராஜர் உள்ளிட்ட அனைவரது வாழ்க்கையிலும் நடந்த சம்பவங்களில் திருக்குறள் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News