ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்
- ஆட்டோவில் 1100 புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
- ஆட்டோவை பறிமுதல் செய்து தப்பி ஓடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் தீ மிதி திடல் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு ஆட்டோ வேகமாக வந்து கொண்டிருந்தது.
போலீசாரை பார்த்ததும் அதனை ஓட்டி வந்த வெளிப்பாளையத்தை சேர்ந்த திலிப்குமார் இறங்கி தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து போலீசார் ஆட்டோவை சோதனை செய்தனர்.
அதில் 1100 புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து ஆட்டோவை பறிமுதல் செய்து தப்பி ஓடிய சேர்ந்த திலிப்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதனிடையே இது குறித்த தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், டவுன் போலீஸ் நிலையத்துக்கு வந்து ஆட்டோ மற்றும் மது பாட்டில்களை பார்வையிட்டார்.
கள்ளச்சாராயம் விற்பனை, கடத்தலில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்.
இதுபோன்ற குற்ற செயல்களில் உங்களது ஊரிலும் யாரேனும் ஈடுபட்டால் 8428103090 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
புகார் தருபவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.