உள்ளூர் செய்திகள்

கலெக்டர் கார்த்திகேயன்

வெளிநாட்டில் வேலை இழந்து தமிழகம் திரும்பியவர்கள் தொழில் தொடங்க மானியத்துடன் கடன்-கலெக்டர் கார்த்திகேயன் தகவல்

Published On 2023-07-27 09:25 GMT   |   Update On 2023-07-27 09:25 GMT
  • எம்.இ.ஜி.பி. என்ற திட்டத்தினை உருவாக்கி செயல்படுத்தும் விதமாக ரூ. 5 கோடியே 97 லட்சத்து 35 ஆயிரத்தை ஒதுக்கி இத்திட்டத்தை மாவட்ட தொழில்மையம், அயலகத்தமிழர் நல ஆணை யரகத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுத்திட நடவடிக்கை எடுத்திட ஆணையிடப்பட்டு உள்ளது.
  • நெல்லை மாவட்டத்தில் விண்ணப்பிப்போர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அலுவலகத்தில் கடவுச்சீட்டு, விசா நகல், கல்விச்சான்று, இருப்பிடச்சான்று, சாதிச் சான்று, மாற்றுத்திறனாளி களுக்கான சான்று மற்றும் திட்ட விபரங்களுடன் சமாப்பித்து பயன்பெறலாம்.

நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா காரணமாக வெளிநாட்டில் வேலை இழந்து தமிழகம் திரும்பிய தமிழர்களில் தொழில் தொடங்கிட ஆர்வம் உள்ளவர்களை ஊக்குவிப்ப தற்காக அவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் குறு தொழில்கள் செய்திட அதிக பட்சமாக ரூ. 2½ லட்சம் மானியத்துடன் கூடிய கடன் வசதி செய்து தரப்படும் எனவும் இததற்காக ரூ. 6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதனை தொடர்ந்து எம்.இ.ஜி.பி. என்ற திட்டத்தினை உருவாக்கி செயல்படுத்தும் விதமாக ரூ. 5 கோடியே 97 லட்சத்து 35 ஆயிரத்தை ஒதுக்கி இத்திட்டத்தை மாவட்ட தொழில்மையம், அயலகத்தமிழர் நல ஆணை யரகத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுத்திட நடவடிக்கை எடுத்திட ஆணையிடப்பட்டு உள்ளது.

இத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வோரின் வயது, பொது பிரிவினருக்கு 18 முதல் 45-க்குள்ளும், பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர, மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது 18 முதல் 55-க்குள்ளும் இருக்க வேண்டும்.

மேலும் கல்வி தகுதியாக குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சியோடு வேலை வாய்ப்பு விசாவுடன் 2 ஆண்டுகளுக்கு குறையாமல் வெளிநாட்டில் வேலை பார்த்து 1-1-2020 அல்லது அதற்கு பிறகு வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பியவராக இருத்தல் வேண்டும்.

உற்பத்தி துறையை பொருத்தமட்டில் அதிகப்பட்ச திட்டச் செலவு ரூ. 15 லட்சத்திற்குள்ளும், சேவை மற்றும் வணிகத்துறை பொறுத்தமட்டில் அதிகபட்ச திட்டச் செலவு ரூ. 5 லட்சத்திற்கு ள்ளும் இருத்தல் வேண்டும்.

தொழில் முனைவோரின் முதலீடு பொதுப்பிரிவினருக்கு திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம், சிறப்பு பிரிவினருக்கு திட்ட மதிப்பீட்டில் 5 சதவீதம் இருத்தல் வேண்டும். அரசின் மானியத்தொகையாக திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம், அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரை வழங்கப்படும்.

இந்த திட்டத்திற்கு நெல்லை மாவட்டத்தில் விண்ணப்பிப்போர் நெல்லை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அலுவலகத்தில் கடவுச்சீட்டு, விசா நகல், கல்விச்சான்று, இருப்பிடச்சான்று, சாதிச் சான்று, மாற்றுத்திறனாளி களுக்கான சான்று மற்றும் திட்ட விபரங்களுடன் சமாப்பித்து பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு நெல்லை மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை அலுவலக நாட்களில் சந்தித்து விபரம் அறியலாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News