பாராளுமன்ற தேர்தலுக்காக பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகையை தி.மு.க. அரசு வழங்குகிறது-செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு
- பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகையை தி.மு.க. அரசு வழங்குகிறது.
- வருகிற நாடாளு மன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகளை அ.தி.மு.க.வுக்கு வழங்கி வெற்றிபெறசெய்ய வேண்டும்.
மதுரை
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை மாநகர் அ.தி.மு.க. சார்பில் டி.எம்.கோர்ட் பகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் செல்லூர் ராஜூ பேசியதாவது:-
இந்த நாட்டின் பொதுக்களத்தில் நிற்கும் உரிமை மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர்கள் அண்ணா, பெரியார். பெண்கள் பொது வாழ்க்கையில் வரவும் வித்திட்டவர்கள் இவர்கள்தான். தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மாற்றத்தை உருவாக்கியவர் அண்ணா. தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று பெயர் பெற்றவர். தி.மு.க. அண்ணாவால் உருவாக்கப்பட்டது. ஐம்பெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்டது தி.மு.க.
அண்ணா இருக்கும் வரை கலைஞரை முன்னி லைப்படுத்தவில்லை. தாய் எப்படி அனைத்து பிள்ளை களையும் ஒரே மாதிரி வளர்ப்பாரோ அதுபோல் தான் அண்ணா அனை வரையும் ஒன்றாக நினைத்தார். பல தலைவர்களை உருவாக்கிய பெருமை அண்ணாவிற்கு உண்டு.
தற்போது அரசியல் தலைவர்கள் நட்சத்திர விடுதிகளில் தங்கி பிரசாரம் செய்கிறார்கள், சுற்றுப் பயணம் செய்கிறார்கள். ஆனால் பட்டினி கிடந்து தொண்டர் வீட்டில் தங்கி கட்சியை வளர்த்தவர் அண்ணா. தி.மு.க.வை வளர்த்தவர் எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து பிரிந்து வந்த பிறகு அ.தி.மு.க.வை உருவாக்கினார். இருப்பினும் அண்ணாவை நினைவு கூறும் வகையில் அ.தி.மு.க.வின் கொடியில் அண்ணா உருவ படத்தை பொறித்தார். இறந்தும் இறைவனாக எம்.ஜி.ஆர். இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
அண்ணா, எம்.ஜி.ஆர். , ஜெயலலிதா யாரும் வாரிசு அரசியல் செய்யவில்லை. தன்னுடைய வாரிசுகளை கொண்டு வரவில்லை. அ.தி.மு.க. காலத்தில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்கள் தற்போது தி.மு.க. ஆட்சியில் மூடு விழா கண்டுள்ளது.
மதுரையில் 2 அமைச்சர்கள் இருக்கி றார்கள். என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.
தமிழகத்தில் அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன் ஆயிரம் ரூபாய் கொடுத்து இருக்கலாம். 2 ஆண்டுகளுக்கு பிறகு கொடுத்து இருக்கிறார்கள். இன்னும் 6 மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. அதற்காகத்தான் கொடுக்கிறார்கள்.
வாக்குறுதிகள் 99 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார். பாராளுமன்ற தேர்தலுக்காகவே பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமையை தொகையை தி.மு.க. அரசு வழங்குகிறது. பொம்மை முதலமைச்சராகவே அவர் இருக்கிறார். பிறர் எழுதிக் கொடுப்பதை பேசுகிறார்.
தி.முக. ஆட்சியை விரைவில் பொதுமக்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். வருகிற நாடாளு மன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை யான வாக்குகளை அ.தி.மு.க.வுக்கு வழங்கி வெற்றிபெறசெய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.