உள்ளூர் செய்திகள்

கூட்டுறவு சங்கத்தில் ரூ.42 லட்சம் முறைகேடு

Published On 2022-09-12 07:48 GMT   |   Update On 2022-09-12 07:48 GMT
  • மதுரை கூட்டுறவு சங்கத்தில் ரூ.42 லட்சம் முறைகேடு செய்ததாக கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
  • 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

மதுரை

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா, நாவினிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாவினிப்பட்டி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. நாங்கள் நடப்பு ஆண்டுக்கான விவசாய பயிர் கடன் பெற்று இருந்தோம். அதனை உரிய காலத்தில் திருப்பி செலுத்தி ரசீதும் பெற்றுள்ளோம்.

நாங்கள் புதிய பயிர் கடன் பெறுவதற்காக வங்கிக்கு சென்றோம். அப்போது உங்களது பழைய கடன் வரவு ஆகவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் எங்களது சேமிப்பு கணக்கில் நாங்கள் செலுத்திய தொகை மற்றும் கரும்பு பில் தொகை ஆகியவற்றில் முறைகேடு நடந்துள்ளது.

இதனை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை இல்லை. தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் மோசடி- கையாடல் செய்த விவசாயிகளின் ரூ.42 லட்சத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News