உள்ளூர் செய்திகள்

மதுரை மாநகராட்சியின் இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் இன்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மதிப்பெண் விவரங்களை மாணவிகள் பள்ளி இணையதளம் மூலம் அறிந்து கொண்டனர்.

பிளஸ்-2 தேர்வில் 98.58 சதவீத மாணவிகள் தேர்ச்சி

Published On 2022-06-20 09:23 GMT   |   Update On 2022-06-20 09:23 GMT
  • பிளஸ் -2 , எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின.
  • மதுரை, மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் கல்வி மாவட்டங்களில் அதிக அளவில் மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மதுரை

இன்று வெளியான பிளஸ் -2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை, மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் கல்வி மாவட்டங்களில் அதிக அளவில் மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ்-2 பொதுத்தேர்வில் மதுரை மாவட்டத்தில் 34, 828 பேர் தேர்வு எழுதியதில் 33 ஆயிரத்து 745 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 17,412 பேரும் மாணவர்கள் 16,333 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு எழுதிய மாணவர்களில் 95.15 சதவீதம் பேரும், மாணவிகளில் 98.58 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த சராசரி தேர்ச்சி விகிதம் 96.89 சதவீதமாகும்.இதன் மூலம் தமிழகத்தில் மதுரை மாவட்டம் 5-வது இடத்தை பிடித்துள்ளது.

10-ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) பொதுத்தேர்வு முடிவுகளும் இன்று வெளியிடப்பட்ட நிலையில் மதுரை மாவட்டத்தில் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் 38 ஆயிரத்து 559 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 36 ஆயிரத்து 665 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாணவர்கள் 18 ஆயிரத்து 86 பேரும், மாணவிகள் 18,579 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்வு எழுதிய மாணவர்களில் 92.72 சதவீதம் பேரும், மாணவிகளில் 97.51 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மொத்த சராசரியாக 95.09 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்மூலம் தமிழ்நாட்டில் தேர்ச்சி பட்டியலில் மதுரை மாவட்டம் 4-வது இடத்தில் உள்ளது.

Tags:    

Similar News