பி.கே.மூக்கையாத்தேவருக்கு வெண்கல சிலை-மணி மண்டபம் அமைக்க கோரிக்கை
- மதுரையில் பி.கே.மூக்கையாத்தேவருக்கு வெண்கல சிலை-மணி மண்டபம் அமைக்க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கோரிக்கை விடுத்துள்ளார்.
- ஜனநாயக முறைப்படியும் விரைவாக நடத்தி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மதுரை
தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ பேசியதாவது:-
30 ஆண்டு காலமாக இந்த சட்டமன்றத்தில் பணியாற்றியவரும், ஒரே நேரத்தில் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலிலும் நின்று வெற்றி பெற்ற பசும்பொன் தேவர் தந்த பி.கே.மூக்கையாதேவரின் நூற்றாண்டு விழா, தற்போது கொண்டாடப்படும் இந்த வேளையில் அவருக்கு இந்த அரசு வெண்கல சிலை அமைத்தும், மணிமண்டபம் உருவாக்கியும், அவரது பிறந்த பாப்பாபட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அவரது பெயரை சூட்டுமாறு வேண்டிக்கொள்கிறேன்.
மதுரை மண்ணின் மைந்தன், இசை பேரரசர், பத்மஸ்ரீ. டி.எம்.சவுந்தர ராஜன் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவர் சென்னையில் வாழ்ந்த தெருவுக்கு அவரது பெயரை சூட்டியதற்கு, மதுரை மக்களின் சார்பாகவும், குறிப்பாக சவுராஷ்டிரா மக்களின் சார்பாகவும் தமிழக முதல்-அமைச்ச ருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சிலை
மேலும் அவருடைய திருவுருவச்சிலை மதுரை யில் வைப்பதற்கு இடம் தேர்வு செய்திருப்பதாக கேள்விபட்டேன். அதே இடத்தில் அவருக்கு மணிமண்டபம் அமைத்து தருமாறு கேட்டுக் கொள்கி றேன்.
அதே போலவே மதுரை மண்ணில் பிறந்த இசைக் குயில் எம்.எஸ்.சுப்பு லட்சுமியை கவுரவிக்கும் வகையில் சென்னையிலோ, மதுரையிலோ சிலை மற்றும் நினைவு மண்டபம் அமைத்து தர வேண்டும்.
கூட்டுறவு வரலாற்றில் இல்லாத வகையில் ஜெய லலிதா, மாற்றுத்திறனாளி களுக்கு வட்டியில்லா கடன் வழங்க ஆணையிட்டதன் பேரில், 2011 முதல் 2021 வரை, 69 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு 292 கோடி ரூபாய் கடன் வழங்கி 2 முறை தேசிய அளவில் குடியரசு தலைவரிடம் விருதை நானே பெற்று வந்துள்ளேன்.
கூட்டுறவு தேர்தலை ஜனநாயக முறையில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி நடத்தினர். தற்போது கூட்டுறவு சங்கங்களுக்கு செயலாட்சி யர்கள், பணி நியமனம் செய்துள்ளதாக அறிகிறேன். அவர்கள் பாகு பாடின்றி உறுப்பினர்களை சேர்க்க அனுமதித்து, தேர்தலை எவ்வித புகார் களின்றி நேர்மையாகவும், ஜனநாயக முறைப்படியும் விரைவாக நடத்தி தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.