உள்ளூர் செய்திகள்

ஆதிவடிவுடையாள்-ஆதீஸ்வரர் கோவில் ஆடி திருவிழா

Published On 2023-08-09 07:09 GMT   |   Update On 2023-08-09 07:09 GMT
  • ஆதிவடிவுடையாள்-ஆதீஸ்வரர் கோவில் ஆடி திருவிழா நடந்தது.
  • ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழுவினர், ஆதிகொற்றவை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே செம்மினிப்பட்டியில் ஆதிவடிவுடையாள்-ஆதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. சுவாமி-அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தலைமை பூசாரி ஆதிமுத்துக்குமார் சிறப்பு பூஜைகளை நடத்தினார். விழாவில் கிடா வெட்டி அன்னதானம் நடந்தது. அன்னதானத்தை யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணன் தொடக்கிவைத்தார். முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் ரத்தின ஜோதிமுருகன், விராலிப்பட்டி ஊரட்சிமன்ற தலைவர் காளியம்மாள் ஜெயபாலன், சீர்பாதம்தாங்கிகள் ஆகியோர் முன்னிலை வகித்தார். ஊராட்சிமன்ற துணைத்தலைவர் கதிரவன், வார்டு உறுப்பினர் காமாட்சி கோபிநாத், லலிதாம்பி கேஸ்வரர் கோவில் அருணாச்சலம் உள்ளிட்ட பலர் மற்றும் ஏராளமான கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதன் ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழுவினர், ஆதிகொற்றவை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News