ஓட்டல் மேலாண்மை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
- ஓட்டல் மேலாண்மை படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர் தெரிவித்துள்ளார்.
மதுரை
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் பி.எஸ்.சி. (ஓட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி), டிப்ளமோ இன் புட் ப்ரொடக்ஷன், உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினைஞர் ஆகிய படிப்புகளுக்கு விண்ண ப்பங்கள் வரவேற்கப்ப டுகின்றன. எனவே 10, 12-ம் வகுப்பில் 45 சதவீதம் தேர்ச்சி பெற்ற, குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்கு மிகாத மாணவ மாணவிகள் விண்ணப்பி க்கலாம்.
படிப்பு முடிந்தவுடன் நட்சத்திர விடுதிகள், விமானம்-கப்பல் மற்றும் உயர்தர உணவக ங்களில் வேலை வாய்ப்பு பெற்று தரப்படும்.
பி.எஸ்.சி. (ஓட்டல் மேலா ண்மை) பட்டபடிப்புக்கு NCHM JEE பரீட்சையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த நுழைவு தேர்வுக்கான பயிற்சி சென்னையில் தாட்கோ மூலம் வழங்கப்படும். இதற்காக மாணவ- மாணவிகள் வருகிற 27-ம் தேதிக்குள் www.tahdco.com இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம். படிப்புக்கான செலவி னத்தை தாட்கோ ஏற்றுக்கொள்ளும். ஓட்டல் மேலாண்மை படிப்பு முடித்தவர்களுக்கு ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25,000 முதல் ரூ.35,000/- வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றபடி ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை பதவி உயர்வு அடிப்படையில் மாத ஊதியம் பெறலாம்.
மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர் தெரிவித்து உள்ளார்.