உள்ளூர் செய்திகள்
- சோழவந்தான் அருகே தொழிற்பயிற்சி சேர்க்கை முகாம் நடைபெற்றது.
- 6 மாத பயிற்சி திட்டத்தில் ஏராளமான மாணவமாணவிகள் சேர்ந்தனர்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் கிராமத்தில் கல்வி அறக்கட்டளை சார்பில் மத்திய அரசின் தீன்தயாள் உபத்யாய கிராமின் கவுசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சியில் 2022-23-ம் ஆண்டிற்கான மாணவ-மாணவிகள் சேர்க்கை முகாம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார்.
ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகா ஞானசேகரன் முன்னிலை வகித்தார். துணை பொது மேலாளர் சுப்பிரமணி வரவேற்றார். 6 மாத பயிற்சி திட்டத்தில் ஏராளமான மாணவமாணவிகள் சேர்ந்தனர். பயிற்சிக்கான குறைந்தபட்ச கல்வி தகுதி பிளஸ்-2 தேர்ச்சி ஆகும். பெண்களுக்கு தங்கும் இடவசதியுடன், வெளியூர் மாணவர்களுக்கு பயிற்சி ஊக்க தொகை வழங்கப்படுகிறது என்று கல்வி அறக்கட்டளையை சேர்ந்த ஜோசப் ஜெபராஜ், சவுந்தரியா ஆகியோர் தெரிவித்தனர்.