உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு கூட்டம்

Published On 2023-06-04 08:01 GMT   |   Update On 2023-06-04 08:01 GMT
  • கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர், ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
  • ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மேலூர்

மேலூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம் மற்றும் மேலூர் பகுதி மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் ஆகியோர் தலைமையில் மேலூர் நகரில் இயக்கப்படும் தனியார் கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள், பணியாளர்களுக்கு விழிப்புணர் கூட்டம் நடந்தது.

இதில் தனியார் கழிவுநீர் ஊர்தி உரிமையாளர்களின் வாகன போக்குவரத்து சட்டப்படியும், மனித கழிவுகளை மனிதன் அகற்றுதல் மற்றும் மறுவாழ்வு சட்டத்தின் படியும் உரிய ஆவணங்களுடன் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் வாகனத்தை இயக்க வேண்டும். விதிகளை மீறி இயங்கும் வாகனங்கள் போக்குவரத்து துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்தினரால் பறிமுதல் செய்யப்படுவதுடன் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் பொதுமக்களும் தங்கள் வீடுகளில் உள்ள செப்டிக் டேங்குகளை எந்திரம் மூலம் மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும் எனவும், மனிதர்களை வைத்து சுத்தம் செய்யக்கூடாது எனவும் மீறினால் ரூ.10 லட்சம் வரை இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News