திருமங்கலத்தில் காய்கறி மார்க்கெட் கட்டிட பூமி பூஜை
- திருமங்கலத்தில் காய்கறி மார்க்கெட் கட்டிட பூமி பூஜை நடந்தது.
- நகராட்சிக்கு சொந்தமான தரைவாடகை கட்டிடத்தில் 40 கடைகள் இயங்கி வருகின்றன.
திருமங்கலம்
திருமங்கலம் சின்னக் கடை வீதியில் தினசரி காய்கறி மார்க்கெட் அமைந்துள்ளது. இதற்குள் மீன்மார்க்கெட் தனியாகவும் உள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த மார்க்கெட் மிகவும் குறுகலாகவும் இடப்பற்றாக் குறையுடனும் இயங்கி வருகிறது.
இதில் நகராட்சிக்கு சொந்தமான தரைவாடகை கட்டிடத்தில் 40 கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளுக்கு புதிய கட்டிடம் கட்டி காய்கறி வியாபாரிகளின் நலனை பாதுகாக்க நகராட்சி முடிவு செய்தது.
அதன்படி கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதியதாக 40 கடைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான தீர்மானம் மன்ற கூட்டத்தில் வைக்கப்பட்டுஒப்புதல் பெறப்பட்டது.
இதனை தொடர்ந்து இதற்கான 40 கடைக ளுக்கான பூமிபூஜை மார்க்கெட்டில் வளாகத்தில் நடைபெற்றது. நகராட்சி பொறியாளார் ரத்தினவேல் முன்னிலையில் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக் குமார் தலைமையில் பூமிபூஜை நடைபெற்றது. இதில் நகராட்சி துணைத் தலைவர் ஆதவன் அதிய மான், தி.மு.க. கவுன்சிலர்கள் ஜஸ்டின் திரவியம், திருக்குமார், விரக்குமார், சின்னசாமி, வினோத், சாலியா உல்பத், சரண்யா ரவி, ரம்ஜான்பேகம்ஜாகீர், சங்கீதா, காங்கிரஸ் கவுன்சிலர் அமுதா சரவணன் நகராட்சி ஓவர்சிஸ் ராஜா, சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.