வியாபாரியை கத்தியால் குத்திய அண்ணன்- தம்பி கைது
- வியாபாரியை கத்தியால் குத்திய அண்ணன்- தம்பி கைது செய்யப்பட்டனர்.
- ரூ.10ஆயிரம் வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளை விற்றுள்ளார்
மதுரை
ஊர்மெச்சிகுளத்தை சேர்ந்தவர் விமல் ஆனந்த் (வயது 30). இவர் பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். அவரிடம் சோழவந்தானை சேர்ந்த நவீன் ரூ.10ஆயிரத்துக்கு மோட்டார் சைக்கிளை விற்றார்.
இந்தநிலையில் அச்ச ம்பத்து பாக்கியலட்சுமி நகரை சேர்ந்த முத்துப்பாண்டி மகன்கள் ஜெயபால்(22), கோபால் (26) ஆகியோர் விமல் ஆனந்தை தேடி வந்தனர்.
அவர்கள், சோழவந்தான் நவீன் விற்ற மோட்டார் சைக்கிள் எங்களுக்கு சொந்தமானது என்றுகூறி அதை தந்துவிடுமாறு கேட்டனர். அதற்கு விமல் ஆனந்த், "என்னிடம் அவர் ரூ.10ஆயிரம் வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளை விற்றுள்ளார். அந்த பணத்தைப் பெற்றுத்தந்தால் மோட்டார் சைக்கிளை தருவதாக கூறினார்.
இதனை தொடர்ந்து அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.ஆத்திரம் அடைந்த 2 பேரும் விமல் ஆனந்தை கத்தியால் குத்தி விட்டு தப்பினர். இது குறித்த புகாரின் பேரில் சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணன்-தம்பி ஜெயபால்,கோபால் ஆகியோரை கைது செய்தனர்.