உள்ளூர் செய்திகள்

வரதட்சணை கொடுமை; இளம்பெண் புகார்

Published On 2023-02-28 08:04 GMT   |   Update On 2023-02-28 08:48 GMT
  • வரதட்சணை கொடுமையால் கணவர் குடும்பத்தினர் மீது இளம்பெண் புகார் கொடுத்தார்.
  • திருமணத்தின்போது மணப்பெண் வீட்டார் 120 பவுன் நகைகள் மற்றும் சீர்வரிசைகள் கொடுத்துள்ளனர்.

விருதுநகர்

கோவில்பட்டி அம்பேத்கர் தெரு பகுதியை சேர்ந்தவர் பூஜா(24). இவருக்கும், விருதுநகர் என்.என்.ரோடு பகுதியை சேர்ந்த கோபிகுமார்(26) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. திருமணத்தின்போது மணப்பெண் வீட்டார் 120 பவுன் நகைகள் மற்றும் சீர்வரிசைகள் கொடுத்துள்ளனர்.

இந்தநிலையில் 2022 -ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர் ஆகஸ்டு மாதத்தில் கோபிகுமார் திடீரென மாயமானார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சென்னையில் காவியா என்ற பெண்ணுடன் வசித்து வந்த கோபிகுமாரை போலீசார் மீட்டு வந்து விசாரித்தனர்.

அப்போது மனைவியு டன் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறியுள்ளார். ஆனால் கணவரும், அவரது குடும்பத்தினரும் சேர்ந்து மேலும் 60 பவுன் நகைகள், ரூ. 30 லட்சம் ரொக்கம் தர வேண்டும் என வற்புறுத்தி பூஜாவை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பூஜா புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபிகுமார், அவரது தந்தை சுந்தரகுமார், தாய் தனம், தங்கை தீபா ஆகியோரை விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News