உள்ளூர் செய்திகள்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள்

Published On 2023-07-09 08:35 GMT   |   Update On 2023-07-09 08:35 GMT
  • மதுரை மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடக்கிறது.
  • வடகிழக்கு பருவ மழை துவங்குகிறது.

மதுரை

மதுரை மாநகராட்சி வட கிழக்கு பருவமழைக்கு முன் னெச்சரிக்கையாக மாநக ராட்சி பகுதிகளில் உள்ள வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் மாநகராட்சியின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வடகிழக்கு பருவ மழை துவங்குவதற்கு முன் னர் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வாய்க்கால்கள், நீர்நிலைகள், கால்வாய்கள், ஊரணிகள், ஆறுகள், மழைநீர் வடிகால் கள் ஆகியவற்றில் தேங்கி யுள்ள ஆகாயத்தாமரைகள், தேவையற்ற குப்பைகள், செடி கொடிகள் உள்ளிட்ட வற்றை அகற்றி தூர்வாரும் பணிகள் மேற்கொண்டு மழைநீர் சீராக செல்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆணை யாளர் பிரவீன்குமார் மாநக ராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாய்க்கால்களை கடந்த 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை மூன்று நாட்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் வைகை ஆற்றுப் பகுதிகளில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரைகள், ஊரணிகள் மற்றும் மழைநீர் வடிகால்களில் தேங்கியுள்ள குப்பைகள், மணல்கள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணிகள் மாநகராட்சியின் மூலம் தொடர்ந்து மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News