உள்ளூர் செய்திகள்

நெல் குவித்து வைக்கப்பட்டுள்ள காட்சி.

20 சதவீத ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

Published On 2022-10-09 07:49 GMT   |   Update On 2022-10-09 07:49 GMT
  • சோழவந்தான் பகுதியில் 20 சதவீத ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • அதிக அளவு வெயில் இல்லாத நிலையில் இரவு பனி பொழிவதாலும் கொட்டி வைத்த நெல் அனைத்தும் ஈரமாகி வருகிறது.

சோழவந்தான்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி கிராமத்தில் தமிழக அரசின் நெல் கொள்முதல் நிலையம் 10 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் தற்போது சுமார் 60 மூடை நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.முறையாக காய்ந்த நெல்லை 17 சதவீத காய்ச்சல் இல்லை என்று கூறி அதிகாரிகள் கொள்முதல் செய்ய மறுப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதனால் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் விளைந்த நெல்லை அறுவடை செய்து கொட்டி வைத்துள்ளனர்.

தற்போது அதிக அளவு வெயில் இல்லாத நிலையில் இரவு பனி பொழிவதாலும் கொட்டி வைத்த நெல் அனைத்தும் ஈரமாகி வருகிறது. இதனால் நெல் மூடைகளை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள ஊருக்குச் சென்று களத்தில் காயப்போட்டு வந்து கொட்டினாலும் அதிகாரிகள் கொள்முதல் செய்வதில்லை. 17 சதவீதம் காய்ந்த நெல் நேற்று எடுக்காததால் இரவு பணியில் நனைந்து தற்போது 18 சதவீதமாக உள்ளது.

இதனால் சிரமத்தில் உள்ள விவசாயிகள் தமிழக அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு 20 சதவீத ஈரப்பதத்துடன் இருக்கும் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News