பெண் தொழில் முனைவோர் தொழிலணங்கு நிகழ்ச்சி
- மதுரையில் பெண் தொழில் முனைவோர் தொழிலணங்கு நிகழ்ச்சி நடந்தது.
- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.
மதுரை
மதுரையில் தமிழ்நாடு தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பில் பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் "தொழிலணங்கு" நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் திராவிட இயக்கங்களின் தத்துவம், கொள்கை ஆகியவற்றின் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
தி.மு.க. ஆட்சி காலத்தில் பெண்கள் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பெண்களை சுயதொழில் முனைவோராக கொண்டு வர வேண்டும் என்பது, தமிழக முதலமைச்சரின் கனவு திட்டங்களில் ஒன்று. இதுதொடர்பாக சட்டமன்றத்தில் கடந்த மார்ச் 18-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அடுத்த மூன்றே மாதங்களில் அது நடைமுறைக்கு வந்து உள்ளது பெருமகிழ்ச்சி தருகிறது.
மகளிர் சுய உதவிக்கு ழுவினர் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக ஈடுபட வேண்டும். அவர்களின் படைப்புத் திறனுக்கு தொழில் நிறுவ னங்கள் ஊக்க சக்தியாக செயல்படுவது மகிழ்ச்சி தருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், மாநகர மேயர் இந்திராணி, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க முதன்மை செயல் அலுவலர் சிவராஜா ராமநாதன், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித்சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.