சோப், ஹேண்ட் வாஷ், பாடி வாஷ் தயாரிக்க இலவச பயிற்சி
- பெட்கிராட் சார்பில் சோப், ஹேண்ட் வாஷ், பாடி வாஷ் தயாரிக்க இலவச பயிற்சி நடந்தது.
- சோப், ஹேண்ட் வாஷ், பாடி வாஷ் தயாரிப்பு பயிற்சி தொடக்க விழா நடந்தது.
மதுரை
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில், இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், அசஞ்ஜர் நிறுவ னம் மற்றும் மதுரை பெட் கிராட் தொழில் பயிற்சி நிறுவனம் இணைந்து சோப், ஹேண்ட் வாஷ், பாடி வாஷ் தயாரிப்பு பயிற்சி தொடக்க விழா நடந்தது.
பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராமன் தலைமை தாங்கினார். பொருளாளர் கிருஷ்ண வேணி, செயலாளர் சாராள் ரூபி, துணைத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செய லாளர் அங்குசாமி வர வேற்று பேசினார். மதுரை மாநகராட்சி 58-வது வார்டு கவுன்சிலர் ஜெயராம் குத்துவிளக்கேற்றி இலவச பயிற்சியை தொடங்கி வைத்தார்.
கே.வி.ஐ.சி. உதவி இயக்குநர் அன்புச் செழியன் பேசுகையில், சுயதொழில் தொடங்க நகர்ப்புறத்தில் 25 சதவீதமும், புறநகர் பகுதி களில் 35 சதவீதமும் மானிய மாக வழங்குகிறோம். இந்த அரிய வாய்ப்பை பயன் படுத்தி நீங்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார்.
இ.டி.ஐ.ஐ. முதுநிலை திட்ட அலுவலர் கவிதா பலராமன் பேசுகையில், இந்த பயிற்சிக்கு குறித்த நேரத்தில் வருகை தந்து கவனமாக கவனித்து செய்முறை விளக்கங்களை கேட்டு நீங்கள் சிறந்த தொழில் முனைவோராக மாற வேண்டும் என பேசினார்.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி முதுநிலை மேலாளர் சதீஷ்குமார் பேசுகையில், மகளிர் குழு பெண்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என வும், சவுத் இந்தியன் வங்கி அலுவலர் மீனாட்சி சுந்தரி தொழில் தொடங்க முத்ரா லோன் பெறலாம் எனவும் பேசினர்.
முடிவில் பயிற்சியாளர் கார்த்தியாயினி நன்றி கூறினார்.