உள்ளூர் செய்திகள்
- கோவா-60 வைர விழா மதுரையில் இன்று தொடங்கி அக்டோபர் 2-ந் தேதி வரை நடக்கிறது.
- தி கிங் மோமோ– பேஸ் ஆப் கோவா என்னும் புகழ்பெற்ற அணிவகுப்பும் நடக்கிறது.
மதுரை
போர்த்துகீசிய நாட்டில் இருந்து கோவா விடுதலை ஆகி 60 ஆண்டுகள் ஆகிறது. நாடு முழுவதும் மதுரை உள்ளிட்ட 6 நகரங்களில் வைர விழா கொண்டாட்டம் நடத்துவது என்று கோவா அரசு முடிவு செய்துள்ளது. மதுரை தல்லாகுளம் வணிக வளாகத்தில் இன்று (30-ந் தேதி) முதல், அக்டோபர் 2-ந் தேதி வரை ''கோவா- 60'' வைர விழா நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் கோவாவின் பாரம்பரிய உணவு வகைகள், இசை, நடனம், கலாசாரம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. வைர விழா கொண்டாட்டத்தின் முத்தாய்ப்பாக கோவாவின் பூர்வீக இசைக் குழுக்களான தி கிளிக்ஸ், ஸ்டீல் மற்றும் கோவான் குழுவினரின் நடன நிகழ்ச்சிகள் இடம் பெறும். தி கிங் மோமோ– பேஸ் ஆப் கோவா என்னும் புகழ்பெற்ற அணிவகுப்பும் நடக்கிறது.